சூர்யா படத்திலிருந்து Copy Paste செய்த பிச்சைக்காரன் 2 படக்குழு ! செம்ம கலாய் கலாய்க்கும் நெட்டிசன்கள் !

802

பிச்சைக்காரன் 2 ….

நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் 2016இல் வெளியான பிச்சைகாரன் படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலாமானவர் நடிகை சாட்னா டைட்டஸ். இந்த படத்தின் மாபெரும் வெற்றியால் விஜய் ஆண்டனி ABC centre வரை தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். சசி இயக்கிய இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை பாரம் பட இயக்குனர் பிரியா கிருஷ்ணசாமி இயக்குகிறார். ஆனாலும் இந்த படத்தின் கதை திரைக்கதை வசனம் எல்லாம் விஜய் ஆண்டனி அவர்கள்தான்.

இந்த படத்தின் படக்குழு பற்றிய விவரங்கள் ஊரடங்கு முடிந்த பிறகு வரும் தற்போது இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளார்கள்.

அந்த Poster-இன் Background சூர்யா நடித்த தானா சேர்ந்த கூட்டம் படத்தின் போஸ்டரை பார்த்து Copy Paste செய்யப்பட்டுள்ளது. இதனை கண்டுபிடித்து, “பொய் சொல்வதற்கு கூட ஒரு அளவே இல்லையாடா?” என்று கலாய்க்கிறார்கள்.