“ஒரு கடை திறப்பு விழாவில், கீர்த்தி சுரேஷிடம் ரசிகர் செய்த விஷயம்” – மனம் திறந்த கீர்த்தி சுரேஷ் !

672

கீர்த்தி  சுரேஷ்…

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் கீர்த்தி சுரேஷ், இவர் விஜய் இயக்கிய இது என்ன மாயம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

பின்பு ஒரு சில வருடங்களிலேயே விஜய், விஷால், சூர்யா, தனுஷ், விக்ரம் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து பிரபலம் அடைந்தார், கடந்த வருடத்தில் கூட நடிகையர் திலகம் படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது வாங்கினார்.

தற்போது ‘தலைவர் 168’ என்னும் ‘அண்ணாத்த’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது ராமோஜி ஃபிலிம் சிட்டியில் விறுவிறுப்பாக நடைபெற்றது.

இந்த படத்தில் பிரகாஷ் ராஜ், மீனா, குஷ்பு, சூரி, சதிஷ் உள்ளிட்ட பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர். தற்போது புது வரவாக நயன்தாராவும் நடிக்கிறார். இந்த படம் மூலம் முதன் முறையாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துடன் இசையமைப்பாளர் டி. இமான் இணைந்துள்ளார்.

தற்போது, ஊரடங்கு காரணமாக வீட்டிலேயே முடங்கி கிடக்கும் கீர்த்தி சுரேஷுக்கு தமிழில் ஒரு படமும், தெலுங்கில் இரண்டு பட வாய்ப்புகளை கைகளில் வைத்திருக்கிறார்.

இந்நிலையில் அவருக்கு ஒரு முறை நகைக்கடை திறப்பு விழாவிற்கு சென்றபோது கூட்டத்தில் திடீரென முன்னால் வந்த நபர் ஒருவர் தி டீரென இவரின் அழகான போட்டோ ஆல்பத்தையும் கடிதத்தை கொடுத்திருந்தாராம்.

அதை பிரித்து பார்த்து அதில் என்ன இருக்கிறது என்பதை தெரிந்து கொண்ட கீர்த்தி அப்படியே அமைதியாக விட்டுவிட்டாராம்.

அந்த கடிதத்தில், அந்த நபர் “என்னை தி ருமணம் செய்துகொள்வீர்களா..?” என எழுதியிருந்தாராம்.

முன்ன பின்ன தெரியாத ஒரு நபர், இப்படியான ஒரு கடிதத்தை கொடுத்த அந்த தருணத்தை வாழ்வின் மறக்க முடியாத நினைவுகளில் வைத்திருக்கிறாராம் கீர்த்தி.