பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற மதுமிதா முடிவா? சிவலிங்கத்திடம் பேசிய கண்ணீர் புகைப்படம்!!

1255

பிக்பாஸ் வீட்டில் உள்ல மதுமிதா தமிழ் பெண்கள் மற்றும் தமிழ் கலாச்சாரம் பற்றி பேசியது மற்ற போட்டியாளர்கள் பலருக்கும் பிடிக்கவில்லை. அதனால் அவரை பலரும் நாமினேஷனில் குறிப்பிட்டனர்.

தன்னிடமிருந்து அனைவரும் ஒதுங்கிய நிலையில் மதுமிதா நேற்று தனியாக ஒரு சிறிய சிவலிங்கத்தை வைத்து பேசிக்கொண்டிருந்தார். இன்னைக்கு நீ என் கனவுல வரியா? எதாவது ஒரு விஷயம் எனக்கு தெரியணும். நீ தப்புனு சொன்னாலும் நான் ஏத்துக்குவேன். சரினு சொன்னாலும் ஏத்துக்குவேன்.

என் மனசுல கல்லை தூக்கி வைத்தது போல வெயிட்டாக இருக்கு. வீட்ல பிரச்சனைனா பரவால.. இங்கே எனக்கு வீடே பிரச்சனையா இருக்கு என கண்ணீருடன் பேசியுள்ளார் மதுமிதா.

அவர் இப்படி பேசுவதால் மனதளவில் நொந்து போயுள்ளார் என தெளிவாக தெரிகிறது இதையடுத்து அவர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்துவிட்டதாகவே பார்க்கப்படுகிறது.