சமந்தா…
தமிழ், தெலுங்கில் மிகவும் பிஸியான நடிகையான சமந்தா, திருமணத்திற்குப் பிறகு நடிப்பதை விட்டுவிடுவார் என்று பலரும் எதிர்பார்த்தார்களாம்.
ஆனால், சமந்தாவோ நடிப்பதை விடாமல் தொடர்ந்து பல படங்களில் ஒப்பந்தம் ஆகி வருகிறாராம். தற்போது கூட புதிதாக கமிட்டாகியிருக்கும் வெப் சீரிஸ் ஒன்றில் நக்சலைட் ஆக நடிக்கிறார்.
இந்த வேடம் பல நடிகைகளால் புறக்கணிக்கப்பட்டு வந்துள்ளது. எந்த நடிகையும் செய்யாத இந்த செயல் சமந்தா ரசிகர்கள் மத்தியில் நல்ல பெயரை வாங்கிக் கொடுத்துள்ளது.
சினிமா என்றால் சென்சார், அது, இது, லொட்டு லொசுக்கு என பல விஷயங்களை தாண்டி வர வேண்டும். ஆனால், வெப்சீரிஸ்களில் அந்த பிரச்சனையே இல்லை.
சொல்ல வந்த விஷயத்தை இறங்கி அடிக்கலாம் என்பதால் இயக்குனர்கள் அதை கையில் எடுத்து வருகிறார்கள்.
ஆனால், தற்போதைக்கு இந்திய வெப் சீரிஸ்களில் பதினெட்டு வயதிற்கு மேற்பட்டோர் பார்க்கும் ரகமாக தான் வந்து கொண்டிருகின்றன என்பது குறிப்பிடதக்கது.
இவரின் இன்ஸ்டாகிராமில் பயங்கர ஆக்டிவ். வாரத்திற்கு இருமுறையாவது புகைப்படங்களை போட்டு ரசிகர்களை குஷி படுத்துவார். அந்த வகையில் தற்போது படிக்கட்டில் படுத்துக்கொண்டு மேலாடையை மேலே தூக்கிவிட்டு போஸ் கொடுத்துள்ளார் சமந்தா.