கர்ணன்………
தனுஷின் அடுத்த படத்தை ’பரியேறும்பெருமாள்’ மாரி செல்வராஜ் இயக்கி உள்ளார் . தற்போது அந்த படத்தின் படப்பிடிப்பு 90% முடிந்துள்ளது.
சென்னையில் உள்ள முக்கிய ஸ்டூடியோ ஒன்றில் 25 ஏக்கர் நிலப்பரப்பில் இந்த படத்திற்கான செட் பிரமாண்டமாக போடப்பட்டு படப்பிடிப்பு நடந்த தருணங்களை அழகாக Making Videoவாக வெளியிட்டு இருக்கிறார்கள்.
மேலும் முதல் படத்தில் அ ழுத்தமான சமூக கருத்து ஒன்றை தெரிவித்த இயக்குனர் மாரி செல்வராஜ், இந்த படத்தில் மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்கள் பி ரச்சனையை கையில் எடுக்கப் போவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே மாஞ்சோலை தோட்ட தொழிலாளர் பி ரச்சனை கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தை பெரும் ப ரபரப்பை ஏற்படுத்தியது தெரிந்தது.
அந்த கதையை மாரி செல்வராஜ் எடுத்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது இந்த படத்திற்கு மிகப்பெரிய எ திர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
அதேசமயம் இந்த படமும் ஒரு குறிப்பிட்ட சாதியை மையப்படுத்தி தான் இருக்கும் என்று கோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன. இந்த படம் இந்த ஆண்டு இறுதியில்,
அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் வெளியாகும் என எ திர்பார்க்கப்படுகிறது.