பிக்பாஸ் வீட்டில் கவீனை கூப்பிட்டு லோஸ்லியா சொன்ன அந்த வார்த்தை : துள்ளிக் குதித்த கவீன்!!

1855

பிக்பாஸ் நிகழ்ச்சியின் பத்தாம் நாள் ரஜினியின் மரணமாஸ் பாடலுடன் ஆரம்பித்தது. அதற்கு முன் ஒன்பதாம் நாள் இரவு 10.55 மணிக்கு லோஸ்லியா கவீனை கூப்பிட்டு தனியாக பேசினார்.

அப்போது உடன் ஷாக்சி இருந்தார். இவர்கள் பேசிக் கொண்டிருந்த போது கவீன் உங்கள் இருவரையும் எனக்கு மிகவும் பிடிக்கும், நீங்கள் இருவரும், நீங்களாக இருக்கிறீர்கள், அதனாலே எனக்கு உங்களை பிடிக்கும், தயவு செய்து என்னை அண்ணா என்று மட்டும் கூறாதே என்று லோஸ்லியாவிடம் கூறினார்.

அதன் பின் என்னிடம் என்ன சொல்ல வந்தாய் என்று லோஸ்லியா கேட்க, உடனே நீ பேசும் விதம் எனக்கு பிடித்திருக்கு அதை சொல்லவே நான் அழைத்தேன், அண்ணா என்று உன்னை கடுப்பேத்தவே சொன்னேன் என்று கூற, உடனே கவீன் இதை வைத்தே நான் ஒரு வாரம் ஓட்டுவேன் என்று துள்ளிக் குதித்தார்.