பிக் பாஸ் லாஸ்லியா குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்!!

1498

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் மூன்றாவது சீசன் போட்டியாளர்களில் மக்களின் பேவரைட் போட்டியாளராக லாஸ்லியா விளங்கி வருகிறார். இலங்கையை சேர்ந்த இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருப்பதோடு, சமூக வலைதளங்களில் ஆர்மி பக்கங்களும் தொடங்கப்பட்டுள்ளன.

பிக் பாஸ் முதல் சீசனில் ஓவியா எப்படி ரசிகர்களுக்கு பிடித்தமானவராக இருந்தாரோ அதுபோல் லாஸ்லியா தான் தற்போதைய பிக் பாஸ் கனவு கண்ணியாக திகழ்கிறார்.

இந்த நிலையில், லாஸ்லியா குறித்து அவரது பள்ளி நண்பர் என்று கூறிக்கொண்டு ஒருவர் சமூக வலைதளத்தில் பகீர் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த தகவலால், லாஸ்லியா ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

அதாவது, லாஸ்லியாவுக்கு திருமணமாகிவிட்டதோடு, விவாகரத்தும் ஆகிவிட்டதாம். ஆனால், அவர் தனக்கு திருமணமான விஷயத்தை சொல்லாமல் மறைத்து வருவதாகவும், அந்த நபர் தெரிவித்துள்ளார்.

ட்விடரில் வெளியாகியுள்ள லாஸ்லியா குறித்த இந்த பதிவு வைரலாகி வருவதோடு, ஏராளமானவரக்ளால் ஷேர் செய்யப்பட்டும் வருகிறது.