பிக்பாஸ் வீட்டிற்குள் சாண்டி செல்ல முக்கிய காரணம் இதுதான்!!

1265

பிக்பாஸ் வீட்டில் சாண்டி நேற்று தனது மகளை திரையில் கண்டு கண்கலங்கியது தான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

சாண்டி கண்ணீர் விட்டதை கண்டு மற்ற போட்டியாளர்களும் கண்ணீர் சிந்தினர். இந்நிலையில் சாண்டி குறித்து அவரது மனைவி சில்வியா பேட்டி ஒன்றை சமீபத்தில் அளித்துள்ளார்.

அதில் அவர் பேசுகையில், முதலில் அவர் பிக்பாஸில் கலந்து கொள்ள போகிறேன் என்றவுடன் நாங்கள் அனைவரும் வேண்டாம் என்று கூறினோம். ஆனால் சாண்டி தன்னிடம் ஒருத்தர் இதை வந்து கேட்டிருக்கிறார் என்னால் எப்படி மறுக்க முடியும் என்று கூறினார்.

அதன் காரணமாகவே அவர் வீட்டின் உள்ளே சென்றார். அதுமட்டுமின்றி எனக்கும் அவருக்கு இதன் மூலம் நிறைய பட வாய்ப்புகள் கிடைக்கும் என தோன்றியது. அதனாலே நானும் விட்டுவிட்டேன் என கூறி கண்கலங்கினார்.