தமிழ் சினிமாவில் பெரிய மார்க்கெட் இல்லை என்றாலும், அப்படி ஒன்று இருப்பதாக நினைந்துக் கொண்டு பந்தா செய்யும் நடிகைகளில் அமலா பாலும் ஒருவர். ஆரம்பத்தில் சர்ச்சையான படங்களில் நடித்தவர் படி படியாக முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடிக்க தொடங்கியதும், இவர் குறித்து பல கிசி கிசுக்கள் வெளியாகின.
இதற்கிடையே இயக்குநர் விஜயை காதலித்து திருமணம் செய்துக் கொண்டவர், பிறகு விவாகரத்து பெற்று மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்த தொடக்கினார். அமலா பாலின் விவாகரத்துக்குப் பின்னணியில் நடிகர் ஒருவர் இருப்பதாகவும் கூறப்பட்டது.
இதையடுத்து தொடர்ந்து நடித்து வந்த அமலா பால், இளம் நடிகர் ஒருவர் மனைவியை பிரிவதற்கு காரணமாக இருந்தார் என்றும் பேச்சு அடிபட்ட நிலையில், தொழிலதிபர் ஒருவர் தன்னை படுக்கைக்கு அழைப்பதாக காவல் நிலையத்தில் புகார் அளித்து மேலும் பரபரப்பை ஏற்படுத்தினார்.
இப்படி, அவ்வபோது தன்னைப் பற்றி வெளியாகும் பரபரப்பான செய்திகள் மூலம் தான் திரைத்துறையில் இருக்கிறேன், என்பதை காண்பித்து வந்த அமலா பால், நடிப்பில் உருவாகி வரும் ‘ஆடை’ படத்தின் டீசர் மூலம் அமலா பால் உருவாக்கிய சர்ச்சை முந்தைய சர்ச்சைகளை எல்லாம் தூக்கி சாப்பிட்டுவிட்டது. காரணம், ஆடை இல்லாமல் நிர்வாணமாக நடித்த அந்த காட்சி தான்.
அமலா பால் ஆடை இல்லாமல் நடித்ததால் அந்த டீசரும், டிரைலரும் பெரும் வரவேற்பு பெற்ற நிலையில், நேற்று சென்னையில் ‘ஆடை’ படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.
நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட அமலா பால், புகைப்படக் கலைஞர்கள் போட்டோ எடுக்க முயன்ற போது அலட்சியம் காட்டிவிட்டு அங்கிருந்து எஸ்கேப் ஆனால், பிறகு அவரிடம் பேசி போட்டோவுக்கு போஸ் கொடுக்க வைத்தார்கள்.
இதன் பிறகு சில முன்னணி நாளிதழ் நிருபர்கள் அமலா பாலை பேட்டி எடுக்க முயற்சித்த போது, அதற்கும் அமலா பால் மறுப்பு தெரிவித்துவிட்டு, அவர்களின் கண்ணில் படமால், படப்பிடிப்பு இருக்கிறது, என்ற வழக்கமான பொய்யை சொல்லிவிட்டு எஸ்கேப் ஆனார்.
ஏன் அவர் இப்படி ஓடுகிறார், என்று விசாரித்ததில், அவரது முன்னாள் கணவர் விஜய்க்கு அடுத்த மாதம் திருமணம் நடைபெற உள்ளது. அது குறித்து பத்திரிகையாளர்கள் எதாவது கேள்வி கேட்க போகிறார்கள் என்றும், ஆடை இல்லாமல் நடித்தது குறித்த கேள்விகளை தவிர்ப்பதற்காகவும் தான் அவர், பத்திரிகையாளர்களை சந்திக்காமல் பயந்து ஓடியதாக கூறப்படுகிறது.
அமலா பாலின் இத்தகைய செயலுக்கு பத்திரிகையாளர்கள் கண்டனம் தெரிவித்ததால், ‘ஆடை’ பிரஸ் மீட்டில் சற்று பரபரப்பு ஏற்பட்டது.