விளம்பரத்திற்காக வனிதா போட்ட திருமண நாடகம் : ராபர்ட் வெளியிட்ட ரகசியம்!!

1215

பிக் பாஸ் சீசன் 3 யில் பரபரப்பு ஏற்படுத்தும் போட்டியாளராக வலம் வரும் வனிதா, போட்டியில் மட்டும் இன்றி தனது நிஜ வாழ்விலும் பலவித சர்ச்சைகளை உருவாக்கி வருகிறார். இதனால், பிக் பாஸ் போட்டியும் விறுவிறுப்பாக நகர்கிறது.

குழந்தை கடத்தல் வழக்கு தொடர்பாக வனிதாவை கைது செய்ய தெலுங்கானா போலீஸார் கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்து பிறகு விசாரணையோடு வனிதாவை விட்டுவிட்டு வந்தனர். அதன் பிறகு அவரது மகள் கொடுத்த வாக்கு மூலத்தின் மூலம் வனிதா கைதில் இருந்து தப்பித்தார்.

இந்த நிலையில், பிரபல நடன இயக்குநர் ராபர்ட் வனிதா குறித்து வெளியிட்டிருக்கும் ரகசியத்தால் மீண்டும் சர்ச்சையில் வனிதா சிக்கியுள்ளார்.

நடன இயக்குநர் ராபர்ட்டை காதலிப்பதாக அறிவித்த வனிதா, அவரை திருமணம் செய்துக் கொண்டதாக கூறியதோடு, பொது நிகழ்ச்சிகளில் ராபர்ட் உடன் வலம் வந்தார். மேலும், ‘எம்ஜிஆர் சிவாஜி ரஜினி கமல்’ என்ற படத்தில் ராபர்ட் ஹீரோவாக நடிக்க, அப்படத்தை வனிதாவே தயாரித்தார்.

படத்தின் புரோமோஷன் பணிகளில் ஈடுபட்ட வனிதா, ராபர்ட்டை தான் திருமணம் செய்துக் கொண்டதாக அனைவர் முன்பும் அறிவித்தார். ஆனால் உண்மையில் அவருக்கும் ராபர்ட்டுக்கும் திருமணம் நடைபெறவில்லையாம். படத்தின் விளம்பரத்திற்காகவே அவர் அப்படி ஒரு பொய்யை சொன்னதாக, ராபர்ட் தற்போது கூறியுள்ளார்.

இது குறித்து சமீபத்திய பேட்டியில் கூறிய ராபர்ட், வனிதா அவருக்கும் தனக்கும் திருமணம் ஆகிவிட்டதாக கூறியவுடன். நான் ஏன் அப்படி சொன்னார் என்று அவரிடம் கேட்டேன், அவரோ “ராபர்ட் கொஞ்சம் அட்ஜெஸ்ட் பண்ணிக்கோ, நம்ம படத்தின் புரோமோஷனுக்காக தான்” என்று என்று கூறி தன்னை சமாதானப்படுத்தியதாக, தெரிவித்துள்ளார்.