பிக்பாஸ் வீட்டை விட்டு வந்ததும் பெரும் சர்ச்சையில் சிக்கிய பாத்திமா பாபு!!

1248

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி 15 நாட்களை கடந்துவிட்டது. சாக்‌ஷி செய்யும் வேலையால் வீட்டில் குழப்பம் வர வனிதா அதை பெரிதாக்கி பிரச்சனை செய்து விடுகிறார். தற்போது அபிராமி, மதுமிதா இருவரும் ஒருவருக்கொருவர் மன்னிப்பு கேட்டு சமாதானம் அடைந்தனர். மேலும் முதல் வார வெளியேற்றத்தில் பாத்திமா பாபு வெளியேறினார்.

சக போட்டியாளர்கள் பற்றி பிக்பாஸ் மேடையில் கூறியதை சரியாக புரிதலோடு கணித்துள்ளீர்கள் என பாராட்டினார். வெளியே வந்த பின் பாத்திமா பாபு பல விமர்சனங்களை எடுத்துரைத்தார். இதில் அவர் சேரன் மீது எனக்கு நல்ல மரியாதை இருக்கிறது.

பிக்பாஸ் வீட்டில் லாஸ்லியாவும் அவரும் அப்பா மகள் போல இருக்கிறார்கள். ஆனாலும் சேரன் சார் லாஸ்லியாவை நெருக்கமாக தொட்டு பேசுவதில் எனக்கு விருப்பமில்லை. அப்பா மகள் ஆனாலும் சற்று இடைவெளி இருக்க வேண்டும் என கூறினார்.

இந்நிலையில் பல ரசிகர்கள் பாத்திமா பாபு மீது அதிருப்தியில் இருப்பதோடு சேரன் பற்றி நீங்கள் சொன்னது மிகப்பெரிய தவறு என கூறியுள்ளனர்.