பிக் பாஸ் வீட்டில் நடப்பது காதல் அல்ல, அதுக்கு பெயர் வேற : கழுவி ஊற்றிய முன்னாள் போட்டியாளர்!!

1520

பிக் பாஸ் வீட்டிற்குள் நடப்பது எதுவும் காதல் அல்ல, எல்லாம் செக்ஸ் தான் என பிக் பாஸ் போட்டியாளரே கூறியிருப்பது பெரும் சர்ச்சையையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் கலந்து கொண்டு முதல் ஆளாக வீட்டை விட்டு வெளியேறியவர் மமதி சாரி.

இவர் தற்போது அளித்துள்ள பேட்டி ஒன்றில் பிக் பாஸ் குறித்த கேள்விகளுக்கு ஓபனாக பதிலளித்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.

கமல்ஹாசன் நாம் பேசும் தமிழை தான் ஏளனம் செய்வார், ஆனால் அவரே வார்த்தைகளை தேடி தேடி தானே பேசுகிறார். அவர் செய்தால் தவறில்லை நாம் செய்தால் தவறு என விமர்சித்துள்ளார்..

மேலும் பிக் பாஸ் வீட்டிற்குள் ஏற்படும் காதல்கள் குறித்து கேட்டதற்கு அங்கு நடப்பது காதல் அல்ல.. செக்ஸ் எனவும் விமர்சித்துள்ளார். மமதி சாரி இவ்வாறு பேசியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.