நடுரோட்டில் முதலிரவு… முகம் சுளிக்க வைத்த சீரியல் நடிகை.. இப்படியும் பண்ணுவாங்களா?

35228

ஹேமா ராஜ்சதிஷ்..

டிவியில் வரும் நிகழ்ச்சிகள், சீரியல்கள் எல்லாம் முன்பை விட எல்லா தரப்பு மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தற்போது நிறைய சேனல்களில் வித்யாசமான சீரியல்கள், ஆர்வத்தை தூண்டும் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகின்றனர்.

தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில், மீனா என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் சீரியல் நடிகை ஹேமா ராஜ்சதிஷ்.

இவரின் நடிப்பு அந்த சீரியல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திழுக்கும் அவரது பாடி லேங்குவேஜும், நடிப்பும் பக்காவாக இருக்கும். இந்நிலையில் சீரியலில் எடுக்கப்பட்ட முதலிரவு காட்சி குறித்த அனுபவத்தை சமீபத்திய பேட்டி ஒன்றில் அவரிடம் கேட்டதற்கு, எல்லோரும் ஷாக் ஆகும் வகையில் அந்த காட்சியின் ரகசியத்தை வெளிப்படையாக கூறியிருக்கிறார்.

நீங்கள் சொல்லுங்கள் அந்த காட்சி எங்கு எடுத்திருப்பார்கள் என்று ஹேமா தொகுப்பாளினியை கேட்க…. வேற எங்க…ஏதாது ரூமில் தான் என்று கூறினார். அதற்கு ஹேமா அது தான் இல்லை.

அந்த குறிப்பிட்ட முதலிரவு காட்சியை படமாக்கும் தினத்தன்று நாங்கள் சீரியல் ஷூட் எடுக்கப்போகும் ரூமில் வேறொரு படத்தின் காட்சி படமாக்கப்பட்டது. இதனால் எங்களுக்கு இடம் கிடைக்க வில்லை.

அந்த காட்சி சீரியலுக்கு முக்கியமானது என்பதாலும் இரண்டு நாட்களில் எடுக்காவிட்டால் கஷ்டம் என்றும் கூறினார்கள். அதனால் நடுரோட்டில் ரூம் செட் போட்டு முதலிரவு காட்சியை படமாக்கினோம்.

இத்தனை நாளா இது வெளியில் யாருக்கும் தெரியாது என்று ஹேமா ராஜ்குமார் கூறினார். இது கேட்பதற்கு கொஞ்சம் சங்கட்டமாக இருந்தாலும் வெறும் நடிப்பு தானே என ரசிகர்கள் மனதை தேற்றிக்கொண்டனர்.