ஷெரீனுக்கு கன்னம் : லாஸ்லியாவுக்கு நெற்றியா? மோகன் வைத்தியவை நோஸ்கட் செய்த கமல்!!

1472

பிக்பாஸ் நிகழ்ச்சியின் நேற்றைய எபிசோடில் மோகன் வைத்தியா வெளியேற்றப்படுவதாக, கூறப்பட்டதால், உடனே உணர்ச்சிவசப்பட்ட மோகன் வைத்தியா அங்கிருந்த பெண்களை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து வந்தார்.

கண்கலங்கிய படி பெண்கள் பக்கமே சென்றார். இதை அங்கிருந்து கண்ட கமல் போதும்…போதும் இதுக்கு மேல எதுவும் வேண்டாம் என்று அவரை செமையாக நோஸ் கட் செய்ய உடனே மோகன் வைத்தியாவும் ஒன்றும் தெரியாதது போல் தன் கண்களை துடைத்தார்.

இதைக் கண்ட அங்கிருந்த மக்கள் கை தட்டி கமலுக்கு சப்போர்ட் செய்தனர். இருப்பினும் இதைக் கண்ட இணையவாசிகள் கமல் சொன்னது உண்மை தான், அந்த ஆளு அப்படி தான், அடுத்த சினேகன் என்று கூறி வருகின்றனர்.

அதுமட்டுமின்றி லாஸ்லியாவிற்கு எப்படி ஒரு தந்தை போன்று நெற்றியில் முத்தம் கொடுத்தார், அதே போன்று கொடுத்திருக்கலாம், ஆனால் ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு மாதிரி என்ன மாதிரி இதை சொல்றது என்று திட்டியும் வருகின்றனர். அது தொடர்பான புகைப்படங்களும் வைரலாகி வருகின்றன.