டிஆர்பியை உயர்த்த சேனல் போட்ட புது திட்டம் : பிக் பாஸ் வீட்டுக்குள் சர்ச்சை நடிகை!!

1342

பிக் பாஸ் சீசன் 3 வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் நிலையில், நிகழ்ச்சியில் எலிமினேஷன் ரவுண்டும் தொடங்கிவிட்டது. கடந்த வாரம் பாத்திமா பாபு வெளியேற்றப்பட்ட நிலையில், இந்த வாரம் வெளியேறப் போகும் போட்டியாளர் யார்? என்பதில் பெரும் ஆர்வம் ஏற்பட்டுள்ளது.

தமிழ் பிக் பாஸ் சீசனை தொடர்ந்து, தெலுங்கு பிக் பாஸ் சீசன் 3 யும் விரைவில் ஒளிபரப்பு தொடங்க இருக்கிறது. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்த நாகர்ஜூனாவையே பிக் பாஸாக்கியிருப்பதால், தெலுங்கு பிக் பாஸ் மூன்றாவது சீசனும் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், தெலுங்கில் இரண்டாம் பகுதி பிக் பாஸ் குறைவான டிஆர்பியை பெற்றதால், இந்த முறை அதை சரிகட்டுவதற்காக புது திட்டத்தை தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சி குழு போட்டிருக்கிறதாம். அதன்படி, பாலியல் புகார் கூறி தெலுங்கு சினிமா பிரபலங்களை கதறவிட்ட ஸ்ரீரெட்டியை போட்டியாளராக களம் இறக்க முடிவு செய்திருக்கிறார்களாம்.

ஆனால், ஸ்ரீரெட்டிக்கு பட வாய்ப்பு உள்ளிட்ட எந்தவிதத்திலும் தெலுங்கு சினிமாவில் வாய்ப்பு அளிக்க கூடாது என்பதில், தெலுங்கு சினிமா இண்டஸ்ட்ரி தெளிவாக இருப்பதால், அவர் பிக் பாஸ் போட்டியில் பங்கேற்பதற்கு முடியாத காரியம் என்றும் கூறப்படுகிறது.

அதே சமயம், ஸ்ரீரெட்டியே பிக் பாஸ் குறித்தும், அதில் தான் பங்கேற்பது குறித்தும் அவ்வபோது சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்.