Sun Tv – யில் Direct ஆக ரிலீஸ் ஆகுதா மாஸ்டர் படம்…! வைரலாகும் Promo..!

826

மாஸ்டர் படம்…!

லாக்டெளனால் தமிழ் சினிமாவே முடங்கி கிடக்கிறது. தமிழ் சினிமாவை மீண்டும் மீட்டெடுக்க ஒட்டுமொத்த திரையுலகமே மாஸ்டர் ரிலீஸூக்கு காத்திருக்கிறது.

லாக்டெளன் முடிஞ்சதும், திரையரங்குக்கு மக்கள் வருவார்களா, மாட்டார்களா என்கிற குழப்பத்தையெல்லாம் மாஸ்டர் ரிலீஸ் தவிடுபொடி ஆகிவிடும் என்பதுதான் ஒட்டுமொத்த திரையுலகின் எ திர்பார்ப்பு.

ஆனால் திடீரென்று இரண்டு நாட்களாக ஒரு வீடியோ வைரலாக ப ரவி வருகிறது. என்னடா என்று பார்த்தால்,

‘இந்திய தொலைக்காட்சிகளில் முதன் முறையாக திரைக்கு வராமல் மாஸ்டர் படம் நேரடியாக சன் டிவியில் வரப்போகிறது’

என்று சன் டிவி புரோமோ செய்ததைப் போலவே, மாஸ்டர் படத்தின் சமூக வலைதளங்களில் பரவலாக வந்து கொண்டிருக்கிறது. பக்குனு ஆன நமக்கு, கடைசியில் அது எடிட்டிங்.

அந்த அளவிற்கு தெரியாமல் தத்துரூபமாக செய்திருக்கிறார்கள் நம்ம நெட்டிசன்கள். அடேய் இதை பார்த்த தயாரிப்பாளருக்கு ஹார்ட் அட்டாக் வந்துட போது கொஞ்சம் அமைதியா இருங்கடா.