சமந்தா..
தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து முன்னணி நடிகர்களுடன் ஜோடிப்போட்டு நடித்து பிரபலமானவர் நடிகை சமந்தா. நாக சைதன்யாவை விவாகரத்து செய்து பிரிந்தவுடன் மயோசிடிஸ் பிரச்சனையால் உடலளவில் கஷ்டத்தை சமாளித்து வந்தார்.
அதற்கிடையில் படங்களில் நடித்தும் வந்த சமந்தா, மயோசிடிஸ் நோய்க்காக சிகிச்சை பெற்று வந்தார். தற்போது பாலிவுட் படங்களில் நடித்தும் விளம்பரங்களில் நடித்தும் வருகிறார்.
சமீபத்தில் TheMarvels நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சூப்பர் ஹீரோவாக சினிமா நட்சத்திரங்கள் நடித்தால் அல்லு அர்ஜுன், விஜய், பிரியங்கா சோப்ரா, ஆலியா பட் போன்றவர்கள் நடிக்கலாம் என்று தெரிவித்திருந்தார்.
அதன்பின் போட்டோஷூட் பக்கம் சென்ற சமந்தா உச்சக்கட்ட கவர்ச்சியில் நோ நெக் ஆடையில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்திருக்கிறார்.