மீண்டும் நடிகர் ஜெய்க்கு ஜோடியான அதுல்யா ரவி!!

943

எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கும் ‘கேப்மாரி’ படத்தில் நடிகர் ஜெய்க்கு ஜோடியாக நடித்திருக்கும் அதுல்யா ரவி, மற்றொரு படத்திலும் ஜெய்க்கு ஜோடியாகியிருக்கிறார்.

வெற்றிசெல்வன் எஸ்.கே என்ற அறிமுக இயக்குநர் இயக்கும் இப்படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கப்படவில்லை. தற்போது ஜெய், அதுல்யா ரவின் ஹீரோ, ஹீரோயினாக ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கும் இப்படத்தில் நடிக்கும் மற்ற நடிகை, நடிகர்கள் தேர்வு நடைபெற்று வருகின்றது.

இதில் முக்கிய கதாபாத்திம் ஒன்றுக்காக ‘சீதக்காதி’ படத்தின் மூலம் அறிமுகமானவரும், நடிகர் வைபவின் அண்ணனுமான சுனில் ஒப்பந்தமாகியிருக்கிறார்.

மற்றொரு நாயகியாக ‘நெடுநல்வாடை’ புகழ் அஞ்சலி நாயர் நடிக்கிறார். இப்படம் குறித்து இயக்குநர் வெற்றிசெல்வன் கூறுகையில், “இது ஆக்‌ஷன், கிரைம் மற்றும் காதல் ஆகியவை கலந்த ஒரு படம்.

ஜெய்யின் கதாபாத்திரம், நம் சுற்றுப்புறத்தில் காணும் ஒருவரை போன்ற ஒரு யதார்த்தமான ஒரு மனிதரை போன்றது. இருப்பினும், சில கட்டாயமான சூழ்நிலைகள் நீதியை தனது கைகளில் எடுக்கும்படி அவரை கட்டாயப்படுத்துகின்றன.

இது மகிழ்ச்சி, எனர்ஜி மற்றும் கோபமான இளைஞனையும் இணைக்கும் ஒரு கதாபாத்திரம். அதுல்யா ரவி ஜெய்யின் ஜோடியாக நடிக்கிறார். ஸ்கிரிப்டை எழுதிய உடனேயே, நாங்கள் உண்மையில் பக்கத்து வீட்டு பெண் போன்ற ஒரு நடிகையை தேடிக் கொண்டிருந்தோம். மேலும் அதுல்யா சரியானவராக இருப்பதாக உணர்ந்தோம்.” என்று தெரிவித்துள்ளார்.