நடிகை ஸ்ருதி 2009ம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் தென்றல் தொடர் மூலமாக அறிமுகமானார்.
அதுமட்டுமல்லாமல் அந்த தொடரில் துளசி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார். இவர் ஒரு சில திரைப்படங்களிலும், தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.
அதன் பின்னர் 2015 யில் “அன்னக்கொடியம் ஐந்து பெண்களும்”, “அபூர்வ ராகங்கள் ” போன்ற தொடர்களில் நடிகை ஸ்ருதி நடித்தார்.
இவரிடம் 40 வயதாகியும் இன்னும் ஏன் திருமணம் செய்யவில்லை என்று பலரும் கேட்டார்களாம். இவர் இதுபற்றி சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியதாவது
“எனக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றது ஆனால் திருமணம் நடைபெறவில்லை ” என்று கூறி அதிலிருந்து மனம் வேதனையடைந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
அதன் பின்னர் திருமணத்திற்கு தற்போது சம்மதம் தெரிவித்துள்ளாராம். கூடிய விரைவில் திருமணம் செய்து கொள்ளவுள்ளதாக தெரிவித்துள்ளார்.