லொஸ்லியா
பிக் பாஸ் வீட்டில் ஆரம்பத்தில் இருந்தே கவினின் ரொமான்ஸ் காட்சிகள் தான் சூடுப்பிடித்து வருகின்றதுடன் பல விமர்சனங்களையும் எழுப்பியுள்ளது.
ஆரம்பத்தில் அபிராமியிடம் ஜொல்லு விட்டுக் கொண்டிருந்த கவின் தற்போது தனது முழு கவனத்தையும் இலங்கைப் பெண் லொஸ்லியா பக்கம் திருப்பியுள்ளார்.
கவின் எங்கு சென்றாலும் லொஸ்லியாவை அழைத்துக் கொண்டு சென்று விடுகிறார். நேற்றைய எபிஸோடிலும் கவின் மற்றும் லாஸ்லியா பெரும்பாலும் தனியாக அமர்ந்து பேசிக் கொண்டேதான் இருந்தார்கள்.
நேற்று போட்டியாளர்களுக்கு டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டது. அப்போது லாஸ்லியாவிடம் உங்களுக்கு யாரை பிடிக்கும் என்ற கேள்வி கேட்கப்பட்டது.
அவரும் கவினின் பெயரைத்தான் சொன்னார். அதேபோல கவினும் நீங்கள் யாரை நம்புவீர்கள் என்று கேள்விக்கு லாஸ்லியாவை தான் நம்புவேன் என்று கூறியிருந்தார். இப்படி இவர்கள் இருவரின் ரொமான்ஸ் மறைமுகமாக ஓடிக்கொண்டு இருக்கின்றனர்.
ஆரம்பத்தில் கவின் மீது பெரிதாக விருப்பம் இல்லாத லொஸ்லியா கடந்த சில காலமாக மிகவும் நெருக்கம் காண்பித்துதான் வருகிறார். இது ஈழத்து ரசிகர்களுக்கு சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தும் விடயம் தான்.