ஐஸ்வர்யா தத்தா
நடிகை ஐஸ்வர்யா தத்தா தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் பிக்பாஸ் 2 சீசனில் போட்டியாளராக கலந்து கொண்ட பின்பு அதிகளவில் பேசப்படும் நடிகையாக மாறினார்.
இருப்பினும், தனது முன் கோபத்தின் மூலம் ரசிகர்களின் வெறுப்பை சம்பாதித்தார் ஐஸ்வர்யா. பிக் பாஸ் நிகழ்ச்சியில், இவரும், இருட்டறையில் முரட்டு குத்து நடிகை யாஷிகா ஆனந்தும் நல்ல நண்பர்களாக இருந்தனர். நிகழ்ச்சி முடிந்தும் கூட இரண்டு பேரும் நட்போடுதான் இருந்து வருகிறார்கள்.
இந்நிலையில், ஐஸ்வர்யாவும், யாஷிகா ஆனந்தும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான ஆடை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர்.
அந்த வகையில், தற்போது படுகவர்ச்சியான ஆடையை அணிந்து இதெல்லாம் ட்ரெஸ்ஸா என நெட்டிசன்கள் கிண்டலடிக்கும் அளவுக்கு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் ஐஸ்வர்யா.