ரவீனா தாஹா..
தென்னிந்திய சினிமாவில் குட்டி நட்சத்திரங்களாக அறிமுகமாகி ஒருசில படங்களில் நடித்தப்பின் சிறு வயதிலேயே பிரபலமாக போட்டோஷூட் பக்கம் செல்வார்கள். அப்படி ஜில்லா படத்தில் குட்டி குழந்தையாக நடித்தும் ராட்சசன் படத்தில் பள்ளி சிறுமியாகவும் நடித்து பிரபலமானார் ரவீனா தாஹா.
சில ஆண்டுகளுக்கு முன் நடித்தால் விஜய் மகன் ஜேசன் சஞ்ஜெய்யுடன் தான் நடிப்பேன் என்றும் அவரை எனக்கு பிடிக்கும் என்றும் ரவீனா தாஹா கூறியது வைரலானது. இதன்பின் இணையத்தில் ஆக்டிவாக இருந்து கிளாமர் ஆடையணிந்து 18 வயதுற்குள் ரசிகர்களை வாய்ப்பிளக்க வைக்கும் போட்டோஷூட் புகைப்படங்களை ஆரம்பித்து சீரியல் நடிகையாக திகழ்ந்தார்.
சமீபத்தில் பிக்பாஸ் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு கடைசி 10 இடத்தினை பிடித்தார். இடையில் மணியுடன் காதல் கிசுகிசுவில் சிக்கி பிரச்சனையில் மாட்டிக்கொண்டார்.
பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்து விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் ஜோடி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு வருகிறார். கடந்த வாரம் சிகப்புநிற குட்டையான கவர்ச்சி ஆடையணிந்து ஆட்டம் போட்டுள்ளார். அதே ஆடையில் எல்லைமீறியபடி போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து அனைவருக்கும் ஷாக் கொடுத்துள்ளார்.
சில வருடங்களுக்கு முன் , விஜய் சாரை எனக்கு ரொம்ப புடிக்கும், ஆனால் அவருடன் நடிக்க முடியாது. அதனால் விஜய் மகன் சஞ்சய் கூடயாவது ஹீரோயினாக நடிச்சிடனும்-னு சொன்னேன். சஞ்சய்யை ரொம்ப பிடிக்கும்ன்னு சொன்னேன். அதை என்னிடம் எல்லோரும், சஞ்சய் ரவீனாவை டேட் பண்றாங்க, டேட் பண்ணனும்னு ஆசைன்னுலா போட்டுட்டாங்க என்று புலம்பியிருக்கிறார் ரவீனா தாஹா.