நடிகை கிரணை காதலித்து நம்ப வைத்து ஏமாற்றிய தமிழ் நடிகர் : ரகசியத்தை கூறிய கிரண்… யார் தெரியுமா?

618

கிரண் ரத்தோட்..

தமிழ் சினிமாவில் நடிகர் விக்ரம் நடிப்பில் உருவான ஜெமினி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் நடிகை கிரண் ரத்தோட். இப்படத்தினை தொடர்ந்து வின்னர், வில்லன், அன்பே சிவம் போன்ற படங்களில் நடித்து பிரபலமானார்.

அதன்பின் வாய்ப்பில்லாமல் இணையத்தில் ஆக்டிவாக இருந்து கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்து ஷாக் கொடுத்து வருகிறார். சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், சினிமாவில் இருந்து விலக ஒருவரை பைத்தியக்காரத்தனமாக காதலித்தது தான் காரணம்.

திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டதாகவும் அந்த காதல் தோல்வியில் முடிந்ததால் மனமுடைந்து போனதால் தான் சினிமாவில் இருந்து காணாமல் போக காரணம் என்று கூறியிருக்கிறார்.

சினிமாவில் நிறைய நண்பர்கள் இருப்பதாகவ்வும் நண்பர்கள் என்று கூறும் அனைவரும் உண்மையான அக்கறையோடு பேசி நடிக்க வைக்கிறோம் என்று பேசுவார்கள்.

ஆனால் இரவு நேரத்தில் கால் செய்து படுக்கைக்கு அழைப்பார்கள். சினிமாத்துறையில் யாரும் நண்பர்கள் இல்லை என்று அப்போது தான் புரிந்தது என்று ஷகீலாவிடம் கூறியிருக்கிறார்.

மேலும் பேசிய கிரண் நடிகை ஷகீலா, சினிமாவை சார்ந்தவர் உன்னை காதலித்து ஏமாற்றினாராமே என்று கேட்டுள்ளார். ஆமாம், அவர் பெயரை எப்படி கூற முடியும்.

ஏமாற்றினாரே தவிர அதிகமாக கிடையாது என்று சிரித்தபடி பேசியிருக்கிறார். அந்த நடிகர் யாராக இருக்கும் என்று நெட்டிசன்கள் குழம்பியபடி கிரண் நடித்திருந்த படத்தின் ஹீரோக்களின் பெயரை கூறி வருகிறார்கள்.