நான் அவருக்காக அட்ஜெஸ்ட் பண்ண ரெடியா இருந்தேன்.. கூச்சமில்லாம உளறிய நடிகை இனியா!!

836

கேரளத்தில் இருந்து தமிழ் சினிமா பக்கம் வந்து பிரபலமானவர்களில் ஒருவராக திகழ்பவர் நடிகை இனியா. வாகை சூடவா படத்தில் நடிகர் விமலுக்கு ஜோடியாக நடித்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றார் இனியா.

இப்படத்தினை தொடர்ந்து அம்மாவின் கைப்பேசி, சென்னையில் ஒரு நாள், நான் சிகப்பு மனிதன், மெளனகுரு, புலிவால் போன்ற படங்களில் நடித்து வந்தார்.

சில ஆண்டுகள் வாய்ப்பில்லாமல் இருந்த இனியா, அனோரா ஆர்ட் ஸ்டூடியோ நிறுவனத்தை துவங்கி பெண்களுக்கான ஆடைகள், ஆடை வடிவமைப்பு, மேக்கப் மற்றும் புகைப்படங்கள் எடுப்பதற்கான ஆரங்கம் போன்ற வசதிகள் மூலம் சம்பாதித்து வருகிறார்.

தற்போது சீரன் படத்தில் முக்கிய ரோலில் நடித்தும் வருகிறார். இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் பேசிய இனியா, இப்படத்தின் ஹீரோ ஜேம்ஸ் கார்த்திக் சினிமாவிற்கு புதிது என்பதால அவருடன் நடித்த பல காட்சிகளில் நான் அட்ஜெஸ்ட் செய்து நடிக்க வேண்டும் என்று நினைத்தேன்.

ஆனால் சூட்டிங் ஸ்பாட்டில் அவர் ஒவ்வொரு சீனிலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்து என்னை ஆச்சரியப்பட வைத்துவிட்டார். ஜேம்ஸ் கார்த்திக் தான் அதிக டேக் எடுப்பார் என்று பார்த்தால் நான் தான் அதிக டேக் எடுத்தேன் என்றும் அவர் மிகவும் டெடிகேட்டட்-ஆக நடித்தார் என்று பாராட்டி பேசியிருக்கிறார் நடிகை இனியா.