நடிகை மிருணாளினி ரவி தான் வேண்டும் : அடம்பிடிக்கும் வயசுக் கோளாறு காமெடி நடிகர்!!

539

சமுகவலைத்தளத்தில் பிரபலமாகி பின் சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்து நடித்து வரும் நடிகைகளில் ஒருவர் தான் நடிகை மிருணாளினி ரவி.

2019 -ம் ஆண்டு விஜய் சேதுபதி, பாகத் பாசில், சமந்தா, மிஸ்கின், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடிப்பில் வெளியான “சூப்பர் டீலக்ஸ்” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார்.

இதன் பின் விஷாலின் எனிமி, சசி குமாரின் எம்.ஜி.ஆர் மகன் படத்திலும் நடித்துள்ளார். தற்போது தமிழ், தெலுங்கு மொழிப்படங்களில் நடித்து வரும் மிருணாளினி, ஆரம்பத்தில் அடக்கவுடக்கமாக நடித்து பின் படுகவர்ச்சிக்கு மாறி அனைவரையும் வாய்ப்பிளக்க வைத்து வருகிறார்.

தற்போது இயக்குனர் விநாயக் வைத்தியநாதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக ரோமியோ படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

அதாவது, திருமணம் செய்து கொண்ட விஜய் ஆண்டனி – மிருணாளினி ரவி, முதலிரவு சமயத்தில் கட்டிலில் உட்கார்ந்தபடி இருக்கும் புகைப்படம் தான். அதிலும் விஜய் ஆண்டனி பால் சொம்புடனும், மிருணாளினி சரக்கு பாட்டிலில் மது ஊற்றுவது போன்றுள்ள புகைப்படம் வைரலானது.

இந்நிலையில், நடிகை மிருணாளினி ரவி தான் வேண்டும் என்று ஒரு காமெடி நடிகர் அடம் பிடித்த சம்பவம் வெளியாகியுள்ளது. காமெடிக்கே பெயர் போன அந்த மூத்த காமெடி நடிகர், சில படங்களில் நடித்து கொண்டிருக்கிறார்.

சொந்த தயாரிப்பில் மற்றும் பினாமி மூலமாவது தன்னுடைய மார்க்கெட்டை உயர்த்த போராடி வருகிறார். அப்படி இருக்கும் அவர் புதிதாக தயாரித்து நடிக்கவுள்ள ஒரு படத்தில் நடிகை மிருணாளினி ரவி தான் வேண்டும் என்று குடிபோதையில் அடம் பிடித்திருக்கிறாராம். வயசுக்கு மீறிய ஆசை என்று இதை கேட்ட பலர் இந்த விசயத்தை கசிய விட, கோலிவுட் வட்டாரத்தில் பேசுபொருளாகவே மாறி இருக்கிறது.