நடிகை கிரண்..
தமிழ் சினிமாவில் நடிகர் விக்ரம் நடிப்பில் உருவான ஜெமினி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் நடிகை கிரண் ரத்தோட். இப்படத்தினை தொடர்ந்து வின்னர், வில்லன், அன்பே சிவம் போன்ற படங்களில் நடித்து பிரபலமானார்.
அதன்பின் வாய்ப்பில்லாமல் இணையத்தில் ஆக்டிவாக இருந்து கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்து ஷாக் கொடுத்து வருகிறார். சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், சினிமாவில் இருந்து விலக ஒருவரை பைத்தியக்காரத்தனமாக காதலித்தது தான் காரணம்.
திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டதாகவும் அந்த காதல் தோல்வியில் முடிந்ததால் மனமுடைந்து போனதால் தான் சினிமாவில் இருந்து காணாமல் போக காரணம் என்று கூறியிருக்கிறார்.
அதில், என் காதலன் என்னை விட்டு ஓடிவிட்டான் என்றும் நான் என் காதலனை சித்திரவதை செய்தேன் என்றும் கூறியிருக்கிறார். ஒருமுறை அவன் என் கன்னத்தில் அறைந்ததால் என்னால் அதை தாங்கிக்கொள்ள முடியவில்லை.
என்னை எப்படி அடிக்கலாம் என்ற எண்ணம் மனதுக்குள் ஓட, ஒருமுறை அவன் என்னை பார்க்க வேண்டும் எனவும் நேரில் வருமாறும் என்னை இரவில் அழைத்தான்.
நான் சென்று அவனது ஆடைகளை கிழித்து என்னை அடிக்க உனக்கு எவ்வளவு தைரியம் என்று கேட்டுக்கொண்டே கிழித்தேன். அவன் ஆடையே இல்லாமல் அங்கிருந்து சென்றுவிட்டதாக கிரண் கூறியிருக்கிறார்.