இரண்டாம் முறை கர்ப்பமான விஜய் டிவி நடிகை மைனா நந்தினி.. அதிர்ச்சியான கணவர்!!

698

மைனா நந்தினி..

விஜய் தொலைக்காட்சியில் சிறு கதாபாத்திரம் மூலம் அறிமுகமாகி அதன்பின் அடுத்தடுத்த சீரியல்களில் நடித்து பிரபலமானவர்களில் ஒருவர் மைனா நந்தினி. சரவணன் மீனாட்சி சீரியலில் மைனா ரோலில் நடித்து அதன்பின் பல சீரியல்களில் நடித்து வந்தார்.

சமீபத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மைனா நந்தினி தன் கணவருடன் சேர்ந்து யூடியூப் சேனல் நடத்தி வருகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படத்தில் விஜய் சேதுபதியின் மூன்று மனைவிகளில் ஒருவராக நடித்தும் விருமன், சர்தார், பார்ட்னர் போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.

பிக்பாஸ் 6 நிகழ்ச்சியில் பங்குபெற்று 103 நாட்கள் வீட்டில் இருந்து 3வது ரன்னர் ரப் இடத்தினை பிடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். கடந்த 2017ல் கார்த்திகேயன் என்பவரை திருமணம் செய்த மைனா, சில காரணங்களால் கணவர் 6 மாதத்தில் தற்கொலை செய்து கொண்டார்.

அதன்பின் 2 ஆண்டுகள் கழித்து நடிகர் யோகேஷ்வரனை திருமணம் செய்து அடுத்த ஆண்டே ஒரு மகனை பெற்றெடுத்தார். இந்நிலையில் தான் இரண்டாம் முறை கர்ப்பமாக இருக்கிறேன் என்று கூறி அவரது கணவருக்கு சர்ப்ரைஸ் கொடுத்திருக்கிறார்.

இதை கேட்டதும் நந்தினி கணவர் யோகேஷ்வரன் ஷாக்காகியிருக்கிறார். ஆனால் நான் இதை பிராங்க் செய்தேன் என்று நந்தினி கூறியதும் பெருமூச்சி விட்டிருக்கிறார்.