தமன்னா..
தமிழில் கேடி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி வியாபாரி, கல்லூரி போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை தமன்னா. அதன்பின் விஜய், சூர்யா, அஜித், விஷால் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து டாப் இடத்தினை பிடித்தார்.
தெலுங்கு, தமிழ் படங்களில் பிஸியாக நடித்து வந்த தமன்னா, இந்தி பக்கம் சென்று அங்கு கவர்ச்சியில் உச்சக்கட்டத்தை காட்டி நடித்து வந்தார். சமீபத்தில் ஜெயிலர் படத்தில் காவாலா பாடலில் படுமோசமான அசைவுகளில் நடித்து இளசுகளை ஈர்த்தார்.
தற்போது பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவுடன் காதலில் இருப்பதாக அறிவித்து அவருடன் நெருக்கமாக எடுத்த புகைப்படங்களையும் பகிர்ந்து வருகிறார். பல படங்களில் கமிட்டாகி நடித்து வரும் தமன்னா, சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை 4 படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ளார்.
இப்படத்தில் டிரைலர் லான்ச் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றுள்ளது. நிகழ்ச்சிக்கு படுமோசமான கிளாமர் ஆடையணிந்து வந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார்.