ஸ்லீவ்லெஸ் உடையில் ராஷ்மிகா மந்தனா வெளியிட்ட லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்!!

612

ராஷ்மிகா மந்தனா..

இந்திய அளவில் பிரபலமாக இருக்கும் ராஷ்மிகா மந்தனாவை நேஷனல் க்ரஷ் என ரசிகர்கள் புகழ்ந்து வருகின்றனர். இத்தனைக்கும் இதுவரை 20க்கும் குறைவான படங்களையே நடித்திருந்தாலும், இன்று இந்தியளவில் முன்னணி நடிகையாக விளங்கி வருகிறார் ராஷ்மிகா மந்தனா. அவரின் இந்த அசுர வளர்ச்சி சினிமா ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

பேன் இந்தியா நடிகையாக இன்று அறிமுகம் ஆகி நேஷனல் கிரஷாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. கன்னட சினிமாவில் அறிமுகம் ஆகி படங்களில் நடித்து ராஷ்மிகாவுக்கு தெலுங்கில் கீத கோவிந்தம் என்ற ஹிட் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

கன்னட சினிமாவில் அறிமுகமாகி மிகக்குறுகிய காலத்திலேயே அசுர வளர்ச்சி அடைந்தவர் ராஷ்மிகா மந்தனா. நடிகரான ரிஷப் ஷெட்டியைக் காதலித்து வந்த அவர், ஒரு கட்டத்தில் பிரேக் அப் செய்துகொண்டார். பின்னர் கன்னட சினிமாவில் அவர் சில பிரச்சனைகளை சந்தித்த நிலையில் அவருக்கு தடை விதிக்கும் வகையில் பேச்சுகள் எழுந்தன.

அந்த படத்தின் கதாநாயகன் விஜய் தேவரகொண்டாவுடன் காதலில் இருப்பதாக கிசுகிசுக்கள் எழுந்தன. ஆனால் அதை இருவருமே இதுவரை மறுத்து வருகின்றன.

ஆனாலும் தொடர்ந்து வரும் அந்த கிசுகிசுக்கள் ஓய்ந்தபாடில்லை. கன்னட சினிமாவில் இருந்து வந்தாலும், தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என பல மொழிப் படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் விஜய்யின் வாரிசு திரைப்படத்தில் நடித்திருந்தார்.

அந்த படத்தில் அவருக்கு நடிப்பில் பெரிய ஸ்கோப் இல்லை. இந்நிலையில் அவர் நடிப்புக்கு இருக்கும் ரசிகர்களை விட இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் அவர் பகிரும் புகைப்படங்களுக்குதான் அதிக ரசிகர்கள் குவிந்து வருகிறார்கள்.

இதையடுத்து சோலோ ஹீரோயினாக ராஷ்மிகா, ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நடிக்க உள்ளார். மற்ற நடிகைகளைப் போலவே சோஷியல் மீடியாவில் தொடர்ந்து குஜாலான புகைப்படங்களைப் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் இப்போது வித்தியாசமான கருப்பு நிற உடையணிந்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ‘வாவ்’ போட வைத்துள்ளன.