அனிகா..
நடிகை அனிகா சுரேந்தர் இவரை தெரியாதவர்கள் யாரும் இருக்க வாய்ப்பில்லை அந்த அளவிற்கு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இன்று கதாநாயகியாக கலக்கி வருகிறார்.
2004 ஆம் ஆண்டு கேரளாவில் பிறந்தவர் அணிகா. இவர் தனது 3 வயதிலேயே சினிமாவில் நடிக்க துவங்கி விட்டார் கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியான சோட்டா மும்பை படத்தில் முதல் முறையாக குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.
அதை தொடர்ந்து பல மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துவந்த இவர் முதல் முறையாக தமிழில் அறிமுகமானது 2015 ஆம் ஆண்டு வெளியான என்னை அறிந்தால் திரைபடத்தில் தான். தனது முதல் படத்திலேயே அஜித்துடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
அதை தொடர்ந்து நானும் ரவுடி தான், மிருதன், விஸ்வாசம், மாமனிதன் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்துள்ளார் . மேலும் பல மலையாள படங்களிலும் நடித்துள்ளார் கடந்த 2022 ஆம் ஆண்டு தி கோஸ்ட் என்ற தெலுங்கு படம் மூலம் தெலுங்கில் அறிமுகமானார்.
அது தொடர்ந்து தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார் அணிகா. இந்த ஆண்டு முதல் முறையாக ஓ மை டார்லிங் என்ற மலையாள படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் அணிகா. இப்போது தமிழ் , தெலுங்கு , மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக பல புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வரும் அணிக்க கதாநாயகி ஆன பிறகு சற்று கிளாமரை அதிகப்படுத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது பீச்சில் மேலே வெறும் உள்ளாடையுடன் இவர் வெளியிட்ட புகைப்படங்கள் வைரல் ஆகியுள்ளது.