நிவேதா பெத்துராஜ்..
தனது சிறப்பான நடிப்பு மற்றும் கவர்ச் சியான உடல் தோற்றத்தால் ரசிகர்களைக் கவர்ந்த நிவேதா பெத்துராஜ் அடுத்தடுத்து தமிழ் படங்களில் நடித்தார். பின்னர் 2017 ஆம் ஆண்டு உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான பொதுவாக என் மனசு தங்கம் படத்தில் நடித்தார்.
இந்த திரைப்படம் சுமாரான வெற்றியை பெற்றது.பின்னர் மெண்டல் மதிலோ என்ற திரைப்படத்தின் மூலம் தெலுங்கிலும் அறிமுகமானார். போதுமான திறமையும் அழகும் இருந்தாலும், அவரால் தமிழில் முன்னணி நடிகையாக வரமுடியவில்லை.
இவர் நடிப்பில் வந்த குறிப்பிடத்தகுந்த படமாக அட்டக்கத்தி தினேஷ் நடிப்பில் வெளியான ஒரு நாள் கூத்து படத்தின் மூலம் அறிமுகமானார் நடிகை நிவேதா பெத்துராஜ். இவர் 1991 ஆம் ஆண்டு மதுரையில் பிறந்தார். பின்னர் இவர் குடும்பம் துபாய்க்கு குடியேறியது.
இவர் 2015 ஆம் ஆண்டு அரேபிய நாடுகளில் நடைபெற்ற அழகு போட்டியில் மிஸ் இந்தியா என்ற பட்டத்தினை வென்றார். அதன் மூலம் கவனத்தைப் பெற்றார். பின்னர் தமிழில் இவர் நடிப்பில் முக்கியமான படங்களாக ஜெயம் ரவியுடன் இணைந்து டிக் டிக் டிக் படத்தில், விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான திமிரு பிடிச்சவன் படத்தில் இன்ஸ்பெக்டர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
அதே போல விஜய் சேதுபதியுடன் இணைந்து சங்கத்தமிழன் படத்தில் நடித்திருந்தார். பிரபுதேவாவுடன் இணைந்து நடித்த பொன் மாணிக்கவேல் திரைப்படம் சமீபத்தில் ஓடிடி தளத்தில் வெளியானது.இந்த படங்களின் தோல்வியால் அவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
நிவேதா பெத்துராஜுக்கு தமிழை விட தெலுங்கில் அவருக்கு நல்ல வாய்ப்புகள் கிடைத்ததால் அங்கேயே செட்டில் ஆனார். தெலுங்கில் முன்னணிக் கதாநாயகியாக வலம் வரும் அவர் அலா வைகுந்தபுரம்லூ உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்தார்.
தனது சிறப்பான நடிப்பு மற்றும் கவர்ச் சியான உடல் தோற்றத்தால் ரசிகர்களைக் கவர்ந்த இவர் அடுத்தடுத்து படங்களில் நடித்தார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிடும் க்யூட்டான புகைப்படங்கள் ரசிகர்களை பெரியளவில் கவர்ந்து வருகின்றன.
அந்த வகையில் இப்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகியுள்ளன. இந்நிலையில் கவர்ச்சி ஆடையணிந்து அவர் கொடுத்துள்ள அழகான போஸ்கள் இன்ஸ்டாகிராமில் லைக்ஸ்களை குவித்துவருகின்றன.