கீர்த்தி சுரேஷ்..
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை கீர்த்தி சுரெஷ். இது என்ன மாயம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகிய கீர்த்தி சுரேஷ் அதன்பின் சிவகார்த்திகேயன், விஜய், தனுஷ், விஷால் உள்ளிட்ட பல நடிகர்களுடன் ஜோடிப்போட்டு நடித்து வந்தார்.
அதன்பின் கதாநாயகிக்கு முக்கியத்துவம் படங்களையும் தேர்வு செய்து வரும் கீர்த்தி சுரேஷ், மாமன்னன் படத்தை தொடர்ந்து ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி சமீபத்தில் வெளியான சைரன் படத்தில் முக்கிய ரோலில் நடித்திருந்தார்.
தற்போது பாலிவுட் நடிகர் வருண் தவானுடன், இயக்குனர் அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான தெறி படத்தின் ரீமேக்கில் நடிகை சமந்தாவின் ரோலில் நடித்து வருகிறார்.
இப்படத்தின் ஷூட்டிங் மும்பையில் நடைபெற்று வரும் நிலையில், இதுவரை இல்லாத கிளாமர் ஆடையில் இருக்கும் கீர்த்தி சுரேஷின் புகைப்படங்கள் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.
மேலும், சமீபத்தில் பிறந்தநாளை கொண்டாடிய நடிகர் வருண் தவாணிற்கு ஷூட்டிங்கில் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். அப்போது, நடிகை கீர்த்தி சுரேஷ் இயக்குனர் அட்லீயுடன், வருண் தவாணுடன் எடுத்த நெருக்கமான புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி பகிரப்பட்டு வருகிறது.