டைட்டான உடையில் செம போஸ் கொடுத்த இவானா!!

596

இவானா..

இயக்குனர் பாலா இயக்கிய நாச்சியார் திரைப்படத்தில் ஜி வி பிரகாஷுக்கு ஜோடியாக நடித்தவர் இவானா. அந்த படத்திலேயே அவரின் நடிப்பு வெகுவாகப் பாராட்டப்பட்டது. ஆனால் அடுத்தடுத்து அவருக்கு பெரியளவில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

இதையடுத்து கம்மிங் ஏஜ் படமான லவ் டுடே திரைப்படத்தில் அவர் இயக்குனர் பிரதீப்போடு நடித்துள்ளார். இந்த படம் கடந்த ஆண்டு ரிலீஸாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளது. இந்த படம் குறிப்பாக இன்றைய இளைஞர்களை பெரியளவில் கவர்ந்துள்ளது. குறிப்பாக இவர் இன்றைய இளைஞர்களின் க்ரஷாக உருவாகியுள்ளார்.

இந்த படத்தில் இவானாவின் நடிப்பும் பெரிய அளவில் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. இதனால் அடுத்தடுத்து இவானாவுக்கு வாய்ப்புகள் குவியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையடுத்து தோனி தமிழில், முதல் முதலாக தயாரிக்கும் ‘லெட்ஸ் கெட் மேரிட்’ என்ற படத்தில் ஹரிஷ் கல்யாணுக்கு கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும் சில படங்களில் அவர் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதாக சொல்லப்படுகிறது.

லவ் டுடேவின் மிகப்பெரிய ஹிட்டால், சமூகவலைதளங்களில் அவரை தொடர்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதையடுத்து அவர் பகிர்ந்து வரும் அவரின் புகைப்படங்கள் இப்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. இப்போது செல்ஃபிஷ் என்ற படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவிலும் அறிமுகம் ஆகியுள்ளார்.