ரவீனா தாஹா..
நடிகை ரவீனா தாஹா தமிழ் திரை படம் மற்றும் தொடைக்காட்சி நடிகை ஆவார்.இவர் தனது 4 வயதில் சினிமா வாழ்க்கையைத் தொடங்கினார். 2009 இல் சன் டிவியில் தங்கம் என்ற தமிழ் சீரியல் மூலம் தொலைக்காட்சியில் அறிமுகமானார். பின்னர் வசந்தம், பவானி, வள்ளி, மல்லி, ,சாந்தி நிலையம், பைரவி ,ராமானுஜர், சந்திரலேகா உள்ளிட்ட தொடர்களிலும் நடித்துள்ளார்.
ரவீனா தாஹா 2016 ஆம் ஆண்டு வெளியான “கதை சொல்ல போறோம்” என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்கு நடிகையாக அறிமுகமானார். ஜில்லா, ஜீவா, பூஜை, கண்ணக்கோல், புலி, பேய்கள் ஜாக்கிரதை, நாகேஷ் திரையரங்கம் ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார்.
தமிழில் “ராட்ச்சசன்” படத்தில் சின்ன பெண்ணாக அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்தவர் ரவீனா தாஹா . அந்த படத்தில் மூலம் மக்களிடையே பிரபலமானார். விஜய் டிவியில் மிகப்பிரபலமாக ஒலிபரப்பான “மௌனராகம் ” என்ற சீரியலிலும் நடித்து உள்ளார். ரவீனா தாஹா சமூக வலைதளத்திலும் ஆக்டிவாக இருப்பவர்.
அவ்வபோது புகைப்படம், வீடியோ, இன்ஸ்டா ரீலிஸ் என அசத்தி கொண்டிருக்கிறார் ரவீணா. இவர் போடும் போஸ்ட்டுகளுக்கு லைக்குகளும், ரசிகர் கூட்டமும் அதிகமாகிக்கொண்டே வருகிறது. அதனால் அவ்வபோது ஆடை குறைப்பில் ஈடுபட்டு கவர்ச்சி வீடியோக்களை வெளியிட்டு வந்தார்.
இந்நிலையில், பிக் பாஸ் வீட்டில் 91 நாட்களைக் கடந்த ரவீனா தற்போது, எலிமினேட் ஆகி வெளியே வந்துள்ளார். பிக் பாஸ் வீட்டில் இருக்கும் மணிக்கு ஆதரவாக விளையாடுகிறார் என பல்வேறு குற்றச்சாட்டுகளும் இவர் மீது வைத்திருந்தனர்.
அவரது குடும்பத்தினர் கூட பிக் பாஸ் வீட்டிற்கு வரும்போது ரவீனாவை திட்டி தீர்த்தனர். இந்நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் ஜோடி ஆர் யூ ரெடி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இறுதிப்போட்டி வரை சென்று உள்ளார். இந்நிலையில், சமீபத்தில் என்ற ஆல்பம் பாடலின் நடித்துள்ள ரவிணா பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் பேசியுள்ளார்.
அப்போது, CWC 5 நிகழ்ச்சி பங்கேற்கவில்லை என்ற கேள்விக்கு போட்டியாளராக பங்கேற்பார்களா என்று பத்திரிகையாளர்கள் கேட்டுள்ளனர். அதற்கு, ரவீனா எனக்கு குக் வித் கோமாளி குழுவில் இருந்து ஒரு எபிசோடுக்கு வருவதற்காக கால் செய்து கூப்பிட்டார்கள்.
இப்போதுதான், ஜோடியின் இறுதிப்போட்டியில் சென்று கொண்டிருக்கிறது என்பது என்னால் போக முடியவில்லை. எனக்கு தெரிந்து நான் போவேனா என்று தெரியவில்லை. ஏனென்றால், எனக்கு நகைச்சுவை வர மாட்டேங்குது.
அதை மறைச்சு பிரயோஜனம் இல்லை என்றும், அவ்வளவு நல்ல நல்ல கோமாளிகள் இருக்கும் போது நான் எதுக்கு என்று நினைக்கத் தோன்றுகிறது என ரவீனா தெரிவித்துள்ளார். மேலும், கோமாளி ஆகவே வழியில்லாமல் இதுல குக்காக வேற என்று கூறியிருக்கிறார்.
மேலும், விஜய் சார் மகன் இயக்கத்தில் ஹீரோயினாக நடிக்கப் போறீங்கன்னு பேட்டி ஒன்றில் கூறியது பற்றி பத்திரிகையாளர் கேட்டுள்ளார். அதற்கு, ரவீனா ஐயா அந்த வீடியோவை திரும்பவும் பாருங்க எந்த நடிகருடன் நடிக்க ஆசை கேட்டாங்க விஜய் சார் கூட நடிக்கணும்னு ஆசை.
ஆனால், நடிக்க முடியுமான்னு தெரியல அவர் பையன் கூடவாவது நடிக்க முடியுமான்னு பார்ப்போம் என்று தான் சொன்னேன். தயவுசெய்து அதை திருப்பிப் பாருங்க என்று காமெடியாக சிரித்தபடி பேசி அரங்கையே ரவீனா அதிர வைத்திருக்கிறார்.