பிரணிதா..
2010 ஆம் ஆண்டு வெளியான போக்கிரி(கன்னடம் ) திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அடியெடுத்து வைத்தவர் ப்ரணிதா. அதன் பின்னர் கன்னடம், தெலுங்கு மற்றும் தமிழ் என தென்னிந்திய மொழிகளில் நடித்து பிரபலம் ஆனார். ஆனாலும் அவரால் முன்னணி நடிகைகளில் ஒருவராக ஆக முடியவில்லை.
தமிழில் கார்த்தியோடு சகுனி மற்றும் சூர்யாவோடு மாசு என்கிற மாசிலாமணி ஆகிய படங்களில் நடித்து கவனத்தை ஈர்த்தார். இதையடுத்து தொழிலதிபர் சுபாஷ் என்பவரை திருமனம் செய்துகொண்டு செட்டில் ஆனார்.
அவர்களுக்கு சமீபத்தில் குழந்தை பிறக்க குழந்தையின் புகைப்படங்களை அவர் இணையத்தில் பதிவேற்ற, அது வைரல் ஆகி வருகிறது. இப்போது மீண்டும் நடிக்க ஆசைப்படும் பிரணிதா தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வரும் அவர், சினிமாவில் தன்னுடைய இரண்டாவது இன்னிங்ஸுக்கு தயாராகி வருகிறாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.