பட வாய்ப்புகள் இல்லை.. அந்த வேலை செய்து கோடியில் காசு பார்க்கும் ஹனி ரோஸ்!!

746

ஹனி ரோஸ்..

மலையாளத்திலிருந்து விரல்விட்டு எண்ண முடியாத அளவுக்கு நடிகைகள் தமிழில் நடித்திருக்கின்றனர். அவர்களில் நயன்தாரா உள்பட பல நடிகைகள் உச்சத்துக்கும் சென்றிருக்கிறர்கள், ஒரு சில படங்களோடு காணாமல் போனவர்களும் உள்ளனர்.சிங்கம்புலி போன்ற ஒருசில படங்களில் நடித்தவர் ஹனிரோஸ்.

ஹனி ரோஸ் 5 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தமிழ் சினிமாவில் மீண்டும் நடித்துள்ளார் . பட்டாம்பூச்சி திரைப்படத்தில் ஒரு பெண் பத்திரிகையாளர் ஆக நடித்துள்ளார். அடக்க ஒடுக்கமான கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவர் சமீபகாலமாக கிளாமர் உடையில் வலம்வந்துகொண்டிருக்கிறார்.

அந்த வகையில் சமீபத்தில் மலையாள படமொன்றில் படு கிளாமரான காட்சியில் நடித்திருந்தார் நடிகை ஹனிரோஸ். தற்போது, தெலுங்கில் பாலகிருஷ்ணா ஜோடியாக வீர சிம்ஹா ரெட்டி படத்தில் ஹனி ரோஸ் நடித்து இருந்தார். அதற்க்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

இதனிடையே, பொது இடங்களுக்கும், கடை திறப்பு விழாக்களுக்கும் வரும்போது தான் அணிந்து வரும் உடையை பார்த்து உருவ கேலி செய்து வருவதாக வேதனையுடன் தெரிவித்து இருந்தார்.

எந்த உடை அணிய வேண்டும் என்பது அவரவர் விருப்பம் என்றும், எடை கூடிவிட்டால் கேலி செய்கிறார்கள் எனவும், இது அதிகம் தன்னை வேதனைப்படுத்துகிறது எனவும் திறமையை மட்டும் பாருங்கள் என ஹனி ரோஸ் கூறி இருக்கிறார்.

இதனிடையே, ஹனி ரோஸ் தன்னுடைய திருமணம் மற்றும் குடும்பத்தை குறித்து பேசி உள்ளார். அதில் அவர், தனக்கு திருமணம் செய்து கொள்ள விருப்பமில்லை. ஆனால் என்னுடைய வாழ்க்கையில் ஒரு துணை தேவை என்று நடிகை ஹனி ரோஸ் கூறி இருந்தார்.

பிரபல சினிமா பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு நடிகை ஹனி ரோஸ் குறித்து பேசியுள்ளார். அதில் அவர் ஆரம்பத்தில் ஸ்லிம்மாக இருந்த ஹனி ரோஸ் இப்போது, பேரழகியாக மாறி இருக்கிறார். சில நடிகைகள் தங்கள் உடம்பை ஒர்க்கவுட் செய்து பிட்டாக மாற்றி இருக்கின்றனர்.

ஆனால், ஹனி ரோஸ் உடல் அமைப்பை பெரிதாக வைத்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். சிலர் ஊசி போட்டு தனது உடம்பை பெரிதாக்கினார் என்று சமூக வலைதளங்களில் பேசி வருகிறார். இதற்கு பதில் அளித்தவர் அவர் பட வாய்ப்புகள் இல்லாமல் பருமன் ஆகிவிட்டார் என்று விளக்கம் கொடுத்தார்.

மேலும், கேரளா கடை திறப்பு நிகழ்ச்சிகளில் ஹனி ரோஸ் தான் அதிகம் அழைத்து வருகின்றனர். அவர் வந்தால் கூட்டம் அதிகம் ஆகிவிடுகிறது. அதற்காக, ஒரு கோடி முதல் 2 கோடி வரை அதற்காக வசூல் செய்வதாக செய்யாறு பாலு தெரிவித்திருந்தார். மேலும், மற்ற மாநிலங்களுக்கு அதைவிட அதிகமாக வாங்குவதாகவும் கூறப்படுகிறது.