காதலருடன் பிரேக்கப்… செம கவர்ச்சி லுக்கிற்கு மாறிய ஸ்ருதி ஹாசன்!!

418

ஸ்ருதி ஹாசன்..

உலக நாயகன் கமல் ஹாசன் மகளாக உன்னை போல் ஒருவன் படத்தில் வானம் எல்லை என்ற பாடல் மூலம் பின்னணி பாடகியாக அறிமுகமாகியவர் நடிகை ஸ்ருதி ஹாசன். இப்பாடலை தொடர்ந்து 7 ஆம் அறிவு மற்றும் 3 போன்ற படத்தில் கதாநாயகியாக நடித்து அறிமுகமாகினார்.

இப்படத்தினை தொடர்ந்து, அஜித், விஜய், சூர்யா, விஷால் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து வந்தார். இதன்பின் தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வரும் ஸ்ருதி, சாந்தனு என்பவரை காதலித்து லிவ்விங் டு கெதர் வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்.

நடிப்பை தாண்டி இசையில் அதிக கவனம் செலுத்தி வரும் ஸ்ருதி, தந்தை கமல் வரிசைகளில் இனிமேல் என்ற ஆல்பம் பாடலில் பாடி, நடித்துள்ளார். லோகேஷ் கனகராஜுடன் ரொமான்ஸ் செய்துள்ள இனிமேல் ஆல்பம் சமீபத்தில் இணையத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

ஒரே வீட்டில் வாழ்ந்து இணைந்து எடுத்த புகைப்படங்களையும் பகிர்ந்து வந்த நிலையில், தன் காதலர் சாந்தனுவின் புகைப்படங்களை டெலீட் செய்திருக்கிறார் ஸ்ருதி. காதலரை பிரேக்கப் செய்துவிட்டாரோ என்று பலர் கூறி வந்த நிலையில், கிளாமர் ஆடையில் மயக்கும் போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார்.