அன்னா ரேஷ்மா ராஜன்..
கடந்த 2017 -ம் ஆண்டு வெளியான அங்கமாலி டைரீஸ் ஹீரோயினாக நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை அன்னா ரேஷ்மா ராஜன்.
இப்படத்தை தொடர்ந்து இவர் அய்யப்பனும் கோஷியம் படத்தில் பிரித்விராஜின் மனைவியாக நடித்திருந்தார். மேலும் மோகன்லால் Velipadinte Pusthakam என்ற படத்தில் நடித்திருப்பார்.
ஹிட் படங்களில் நடித்து வந்த இவர், சினிமாவில் பிரபல நடிகையாக மாறுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அவரை எந்த படத்திலும் பார்க்கமுடியவில்லை. காரணம், அவரது உடல் எடை அதிகரித்தது தான் கூறப்படுகிறது.
சமீபத்தில் அன்னா ரேஷ்மா ராஜன் நடனமாடி வீடியோ ஒன்றை தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதற்கு பலரும் உடல் கேலி கமெண்ட்களை பதிவிட்டு இருக்கின்றனர்.
இது தொடர்பாக பேசிய அவர், சமீபகாலமாக நான் நோயால் அவதிப்பட்டு வருகிறேன். சில சமயங்களில் உடல் எடை தானாகவே கூடுகிறது. அதன் பின் தானாகவே உடல் மெலிந்து விடுகிறது.
என்னை உடல் ரீதியாக என்னை யாரும் விமர்சிக்க வேண்டாம். நடனம் பிடித்து இருந்தால் பாருங்கள், இல்லை என்றால் கடுமையாக விமர்சிக்க வேண்டாம் என்று னஅன்னா ரேஷ்மா ராஜன் தெரிவித்துள்ளார்.