ஐஸ்வர்யா ராஜேஷ்..
தொகுப்பாளினியாக அறிமுகமாக, ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருகிறார். காக்கா முட்டை படத்தின் வெற்றிக்கு பிறகு ஐஸ்வர்யா ராஜேஷுக்கு பட வாய்ப்புகள் குவிந்து வந்தது.
நயன்தாராவுக்கு அடுத்து பெண்களுக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்வு நடித்து வருகிறார். இவர் லீட் ரோலில் நடித்த பூமிகா, டிரைவர் ஜமுனா, சொப்பன சுந்தரி, ஃபர்ஹானா, திட்டம் இரண்டு, தி கிரேட் இந்தியன் கிச்சன் படங்களுக்கு கலவையான விமர்சங்கள் கொடுக்கப்பட்டது.
சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவா இருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ், கிளாமரான உடையில் எடுத்த போட்டோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.