ரகுல் ப்ரீத் சிங்..
கன்னட சினிமாவில் கில்லி படத்தில் நடித்து அறிமுகமாகி தமிழில் 2012ல் வெளியான தடையற தாக்க படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி பிரபலமானவர் நடிகை ரகுல் ப்ரீத் சிங். இப்படத்தினை தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னடம் மொழிகளில் நடித்து வந்த ரகுல் ப்ரீத் சிங், இந்தி படங்களில் நடித்து மிகப்பெரிய இடத்தினை பிடித்தார்.
பாலிவுட்டில் முன்னணி நடிகர்களுடன் ஜோடிப்போட்டு வந்த ரகுல் ப்ரீத் சிங், தமிழில் சிவகார்த்திகேயனின் அயலான் படத்திற்கு பின் இந்தியன் 2 போன்ற படங்களில் நடித்து வருகிறார். கடந்த 2021ல் ரகுல் ப்ரீத் சிங் பிரபல தயாரிப்பாளர் ஜக்கி பாக்னானி என்பவருடன் ரகசியமாக காதலில் இருந்து, பின் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
அதன்பின் கடந்த பிப்ரவரி 21 ஆம் தேதி ரகுல் ப்ரீத் சிங், ஜக்கி பாக்னானியை திருமணம் செய்து கரம்பிடித்தார். பிரம்மாண்டமாக நடைபெற்ற திருமணத்திற்கு பல முன்னணி நடிகர்களும் கலந்து கொண்டு வாழ்த்தினர்.
இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ரகுல், கிளாமர் ஆடையணிந்து கவர்ச்சி போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்வதுண்டு. தற்போது டூபீஸ் பிகினி ஆடையணிந்து எடுத்த புகைப்படங்களை பகிந்து ஷாக் கொடுத்துள்ளார். திருமணத்திற்கு பின்பும் கவர்ச்சியில் குறைவைக்காமல் இருப்பதை பார்த்து ரசிகர்கள் ஷாக்கான ரியாக்ஷனை கொடுத்து வருகிறார்கள்.