சம்யுக்தா..
கேரளாவைப் பூர்வீகமாகக் கொண்ட சம்யுக்தா 2016 ஆம் ஆண்டு மலையாளத் திரைப்படமான பாப்கார்ன் மூலம் தனது திரையுலகில் அறிமுகமானார், அங்கு அவர் ஷைன் டாம் சாக்கோவின் காதலியான அஞ்சனாவாக நடித்தார்.
சம்யுக்தா 1995 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 ஆம் தேதி, இந்தியாவின் கேரளா, பாலக்காட்டில் பிறந்தார்.அவர் தனது பள்ளிப்படிப்பை தத்தமங்கலம் சின்மயா வித்யாலயாவில் பயின்றார் மேலும் அவர் பொருளாதாரத்தில் பட்டதாரி ஆவார்.
வாத்தி படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமாகியுள்ள் சம்யுக்தா, தன்னுடைய பெயரை சமீபத்தில் சம்யுக்தா மேனன் என்பதில் இருந்து சம்யுக்தா என மாற்றிக் கொண்டார். தனக்கு பெயரின் பின்னால் ஜாதி பெயர் வேண்டாம் என்றும் அவர் கூறியது முற்போக்கு சிந்தனையாளர்களையும அவருக்கு ரசிகர்களாக்கியுள்ளது.
தனது தாய்மொழியான மலையாள மொழிப் படங்களுக்குப் பிறகு அவர் தமிழில் ஆக்ஷன் திரில்லர் படமான களரியில் தேன்மொழியாக தோன்றினார். அறிமுக இயக்குனர் பிரசோப் விஜயன் திரைக்கதை எழுதி இயக்கிய 2018 ஆம் ஆண்டு வெளியான மலையாள மொழிப் படமான பழிவாங்கும் திரில்லர் படமான லில்லியில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க அவர் நடித்தார்.
வெற்றிக்காக போராடிக் கொண்டிருந்த சம்யுக்தாவுக்கு மிகப்பெரிய அங்கிகாரத்தை பெற்றுத் தந்தது அவரின் அடுத்த வெளியீடு தீவண்டி. மலையாள மொழி அரசியல் நையாண்டி திரைப்படம், அறிமுக இயக்குனர் ஃபெலினி டி.பி இயக்கியது மற்றும் வினி விஷ்வ லால் எழுதியது.
சமீபத்தில் வாத்தி படத்தின் மூலம் தமிழ் மற்றும் தெலுங்கு பட ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமானார். இந்த படத்தின் பாடல்கள் ஹிட்டானதால், இவருக்கும் நல்ல பெயர் கிடைத்து அடுத்து அடுத்து வாய்ப்புகள் குவியும் என சொல்லப்படுகிறது.
இந்த படத்தில் இடம்பெற்றுள்ள வா வாத்தி பாடல் ஹிட்டானதை அடுத்து இளைஞர்களின் லேட்டஸ்ட் கிரஷ் ஆகியுள்ளார் சம்யுக்தா. இந்நிலையில் இப்போது ட்ரான்ஸ்பேரண்ட்டான கண்ணாடி ஆடையணிந்து வெளியிட்ட போட்டோஷூட் இணையத்தில் வைரல் ஆகியுள்ளது.