நடிகை அஞ்சலி..
ஜீவா நடிப்பில் இயக்குனர் ராம் இயக்கத்தில் வெளியான கற்றது தமிழ் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் நடிகை அஞ்சலி. இவர் தமிழ் படங்கள் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் எனப் அனைத்து மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.
அஞ்சலி கெரியரில் முக்கியமான படங்களில் ஒன்று அங்காடி தெரு. இப்படத்தினை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து பிஸியாக இருந்து வந்தார். சினிமாவில் நடிக்கும் நடிகைகள் சக நடிகர்களுடன் காதல் கிசுகிசுக்களில் சிக்குவது வழக்கமான ஒன்று.
அப்படி நடிகை அஞ்சலியும் சிலருடன் காதலில் கிசுகிசுவில் சிக்கி வந்துள்ளார். தற்போது தெலுங்கு சினிமாவில் வாய்ப்பு பெற்று தொடர்ந்து நடித்து வருகிறார். அங்கு சென்றதும் கவர்ச்சியில் சற்று தாராளம் காட்டி நடித்தும் வருகிறார்.
தற்போது Gangs Of Godavari என்ற படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ளார். இப்படத்தின் இசை நிகழ்ச்சிக்கு அஞ்சலி சேலையில் மயக்கும் படியான சென்றுள்ளார். அங்கு எடுத்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.