நடிகை தேவயானி இவ்ளோ கவர்ச்சியா எல்லாம் நடிச்சிருக்காரா?

732

தேவயானி..

தமிழ் சினிமாவில் 90 கள் மற்றும் 2000களின் தொடக்கத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தேவயாணி. தமிழ் சினிமாவில் அவர் முன்னணி நடிகையாக இருந்தாலும் அவரின் திரை வாழ்க்கை தொடங்கியது மலையாளம் மற்றும் பெங்காலி ஆகிய மொழிப் படங்களில்தான்.

தமிழில் காதல் கோட்டை திரைப்படம் தேவயானிக்கு மிகப்பெரிய அடையாளத்தைப் பெற்றுத்தந்தது. அதன் பின்னர் அவர் அஜித், விஜய், விஜயகாந்த் மற்றும் சரத்குமார் என பல முன்னணி நடிகர்களோடு இணைந்து சூப்பர்ஹிட் படங்களில் நடித்தார்.

அவர் நடிப்பில் காதல் கோட்டை, சூர்யவம்சம், நினைத்தேன் வந்தாய் (1998), நீ வருவாய் என (1999), தெனாலி (2000), நண்பர்கள் (2001), ஆனந்தம் (2001) மற்றும் அழகி (2002) ஆகிய படங்கள் குறிப்பிடத்தக்கவையாக அமைந்தன. தேவயாணி சில படங்களில் இணைந்து பணியாற்றிய இயக்குனர் ராஜகுமாரனோடு ஏற்பட்ட காதலால் வீட்டை எதிர்த்துக் கொண்டு அவரைத் திருமணம் செய்துகொண்டார்.

இருவரின் பெற்றோரும் அவர்களது காதலை ஏற்கவில்லை, இதனால் தம்பதியினர் தப்பி ஓடிவிட்டனர், மேலும் 9 ஏப்ரல் 2001 அன்று தனிப்பட்ட முறையில் திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு இனியா மற்றும் பிரியங்கா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர்.

திருமண வாழ்க்கைக்குப் பிறகு சினிமாவில் இருந்து விலகி, சீரியலுக்கு முக்கியத்துவம் கோலங்கள் உள்ளிட்ட சூப்பர் ஹிட் சீரியல்களில் நடிக்க தொடங்கினார். தேவயானியின் சிறப்பம்சமே அவர் குடும்பப் பாங்கான வேடங்களாக ஏற்று நம் வீட்டுப் பெண் போன்று தோற்றமளிக்கும் பாத்திரத்தில் நடித்ததுதான். அதனால் அவரை ரசிகர்கள் இதுவரை ஹோம்லி க்யூனாகவே பார்த்துள்ளனர்.

ஆனால் தனது ஆரம்பகாலத்தில் தேவயாணி தொட்டாசினுங்கி என்ற திரைப்படத்தில் மிகவும் கிளாமராக நடித்துள்ளார். அதில் ஒரு பாடலில் சிக்கனமான ஆடையெல்லாம் அணிந்து பீச்சில் நனைந்து விளையாடி ரசிகர்களின் தூக்கத்தையெல்லாம் கெடுத்துள்ளார். ரகுவரன், ரேவதி, ராஜேந்திர பிரசாத் ஆகியோர் நடித்த இந்த படத்தில் தேவயானி செகண்ட் ஹீரோயினாக நடித்திருந்தார்.

நல்ல வேளையாக இந்த படம் பெரிதாக ஓடாததால் தேவயானி அந்த கிளாமர் இமேஜ் பெரிதாக பேசப்படவில்லை. அதன் பின்னர்தான் அவர் காதல் கோட்டை படத்தில் நடித்து தன்னுடைய ரூட்டை மாற்றிக் கொண்டார்.