ரம்யா பாண்டியன்..
2015 வெளியான டம்மி பட்டாசு படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் நடிகை ரம்யா பாண்டியன். இப்படத்தினை தொடர்ந்து ஜோக்கர் படத்தில் நடித்து வரவேற்பை பெறாமல் இருந்தார். உடல் எடையை அதிகரித்து காணப்பட்ட ரம்யா பாண்டியன், உடல் எடையை குறைத்து மொட்டை மாடி போட்டோஷூட் வெளியிட்டு அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தார்.
இதன்பின் ஆண் தேவதை படத்தில் நடித்தவர் குக் வித் கோமாளி முதல் சீசனில் போட்டியளராக கலந்து கொண்டு ரன்னர் அப் இடத்தினை பிடித்தார். பின் கலக்கப்போவது யாரு 9 சீசனில் நடுவராகவும் பிக்பாஸ் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராகவும் கலந்து கொண்டார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து அனைவரையும் ஈர்த்து 3வது ரன்னர் அப் இடத்தையும் பிக்பாஸ் அல்டிமேட் முதல் சீசனிலும் 2வது ரன்னர் அப் இடத்தினை பெற்றார். தற்போது இரும்பண்காரி என்ற படத்தில் கதாநாயகியாக நடித்தும் வருகிறார்.
இணையத்தில் ஆக்டிவாக இருந்து கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து வந்த ரம்யா பாண்டியன் சமீபகாலமாக சாதாரணமான புகைப்படங்களை பகிர்ந்து வந்தார். தற்போது விருது விழாவிற்கு சிகப்பு நிற மாடர்ன் ஆடையணிந்து சென்றுள்ளார். அதற்கு பின் இடுப்பை தன் அசைவுகளால் ரசிகர்களை மயக்கும்படி ரீல்ஸ் வீடியோவை எடுத்து வெளியிட்டுள்ளார்.
View this post on Instagram