அவன் என்கிட்ட அப்படியெல்லாம் சொன்னான் சார்… கவீனைப் பற்றி கமலிடம் கண்ணீர் வடித்த ஷாக்சி!!

1003

கண்ணீர் வடித்த ஷாக்சி

பிக்பாஸ் வீட்டில் இருக்கும் கவீன் அங்கிருக்கும் ஷாக்சி, அபிராமி, ஷெரீன் மற்றும் லாஸ்லியா ஆகிய நான்கு பெண்களிடமும் நண்பனாக பழகி வந்தார். ஆனால் இவர்களில் ஷாக்சியிடம் மட்டும், கவீன் கொஞ்சம் நெருக்கமாக பழகியிருக்கிறார். ஆனால் அதைப் பற்றி பிக்பாஸ் எதையும் காட்டவில்லை, ஆனால் சாக்லெட் விஷயத்தின் போது தான் இதன் உண்மை வெளிவந்தது.

அப்போது தான் ஷாக்சி கவீனை காதலிக்கிறார் எனவும், கவீனும் அது போன்று தான் அவரிடம் பேசு வந்துள்ளார் என்பது மற்ற போட்டியாளர்களுக்கு தெரியவர, லாஸ்லியாவும் கவீனை விட்டு விலகிறார். அதன் பின் பிக்பாஸ் வீடே, அழுகை வீடாக மாறியது.

இந்நிலையில் கமலிடம் ஷாக்சி கூறுகையில், சார் அவன் என்னிடம் மற்ற பெண்களிடம் பழகுவது போன்று பழகவில்லை சார், என்கிட்ட அப்படியெல்லாம் பேசினான் சார், அது எல்லாம் என்ன சும்மாவா? எனக்கு ஒரு போசசிவ்னஸ் இருக்கு சார் என்று கண்கலங்க, கமல் சார் உணர்வுகளில் விளையாடதீர்கள் என்று கூறினார்.