நடிகைகள் ஏன் அந்த விஷயத்தை மறைக்குறாங்க… ஓவியா ஓப்பனாக பகிர்ந்த பதில்!!

947

ஓவியா..

தமிழ் சினிமாவில் 2010 ஆம் ஆண்டு நடிகர் விமல் நடிப்பில் வெளியான களவாணி படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார் நடிகை ஓவியா. இந்த படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். இந்த திரைப்படம் இவரின் சினிமா வாழ்க்கையில் முக்கிய படமாக அமைந்தது. இதைத் தொடர்ந்து இவர் மெரினா,மூடர் கூடம் , யாமிருக்க பயமே, கலகலப்பு மதயானை கூட்டம் போன்ற பல படங்களில் நடித்து வந்தார்.

இந்த படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். ஆனால் அதன் பிறகு இவருக்கு பட வாய்ப்புகள் குறைவாகவே இருந்தது. பின்னர் விஜய் தொலைக்காட்சியில் கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 1 இல் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார்.இந்த நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் வரவேற்பை பெற்றார்.

இதன் மூலம் இவருக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளமே உருவானது பின்னர் வெளியே வந்ததும் இவர் 90 ml படத்தில் நடித்தார்.அந்த படத்தில் மிகவும் கவர்ச்சியாக நடித்தார்.இதற்காக இவர் பல விமர்சனங்களை பெற்றார். 33 வயதாகியும் ஏன் திருமணம் செய்துகொள்ளவில்லை என்பது பற்றி பேசியுள்ள அவர் “நான் நிறைய ரிலேஷன்ஷிப்பில் இருந்துள்ளேன். ஆனால் எதுவுமே எனக்கு செட்டாகவில்லை. ஏனென்றால் அவர்கள் என்னிடம் உண்மையாக இல்லை.

அவர்கள் ஒரு விஷயத்தில் என்னை யூஸ் பண்ணிவிட்டு தூக்கி எறிந்துவிட்டார்கள். இதுபோல பலர் என்னை ஏமாற்றியுள்ளார்கள்.” என எமோஷனலாக பேசியுள்ளார். அதெ போல நடிகைகள் ஏன் தங்கள் உண்மையான வயதை சொல்வதில்லை என்று அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் “அது ஏன் என எனக்கு தெரியவில்லை. ஒரு வேளை வயது தெரிந்தால் வாய்ப்புகள் வராது என ஃபீல் பண்ணுகிறார்கள் போல. எனக்கு அந்த கவலை இல்லை.

எனக்கு இப்போது 32 வயது ஆகிறது. அதை நினைத்து நான் பெருமை படுகிறேன். ஏனென்றால் நாம் இத்தனை ஆண்டுகள் வாழ்ந்திருக்கிறோம் என்பதே கடவுள் கொடுத்த பரிசுதானே. என்னைப் பொறுத்தவரை நான் இந்த வயதை எஞ்சாய் பண்ணுகிறேன். இப்போது இருக்கும் அனுபவம் ஐந்து ஆண்டுகளுக்கு முன்னால் எனக்கு இருக்கவில்லை.” என தெளிவான பதிலை அளித்துள்ளார்.