நல்லா வளந்து வந்த நேரத்துல அந்த பழக்கத்துல சிக்கி கேரியரை தொலைத்த ஸ்ரீ திவ்யா!!

8271

ஸ்ரீ திவ்யா..

நடிகை ஸ்ரீ திவ்யா தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை வைத்திருந்த நடிகை 2017 ஆம் ஆண்டிற்கு பிறகு இவரது மார்க்கெட் சரியவே இப்போது பெரிய பட வாய்ப்புகள் இல்லாமல் உள்ளார். 1993 ஆம் ஆண்டு ஹைதராபாத்தில் பிறந்தவர் ஸ்ரீ திவ்யா . குழந்தை நட்சத்திரமாக சில தெலுங்கு படங்கள் மற்றும் சீரியல்களில் நடித்துள்ளார்.

பள்ளி படிப்பை முடித்த இவர் 2010 ஆம் ஆண்டு தனது 17 ஆவது வயதில் தெலுங்கு படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். ஆம் இவர் கதாநாயகியாக நடித்த முதல் படம் வெளிவரும்போது இவருக்கு வயது 17 தான்.

அதன்பின்னர் 2012 ஆம் ஆண்டு மீண்டும் ஒரு தெலுங்கு படத்தில் நடித்த ஸ்ரீ திவ்யா. 2013 ஆம் ஆண்டு முதல் முதலாக தமிழில் வருத்தபடாத வாலிபர் சங்கம் படத்தில் நடித்தார் . அந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றிபெற்றது நாம் அனைவரும் அறிந்ததே.

அதன் பின்னர் 2014 முதல் 2017 வரை நான்கு ஆண்டுகள் தமிழ் சினிமாவில் முக்கிய நடிகையாக மாறினார் ஸ்ரீ திவ்யா. இந்த ஆண்டுகளில் மட்டும் தமிழ் மற்றும் தெலுங்கில் 15+ படங்களில் நடித்திருந்தார்.

ஸ்ரீ திவ்யா தமிழில் இறுதியாக நடித்த திரைப்படம் 2017 ஆம் ஆண்டு வெளியான சங்கிலி புங்கிலி கத திற திரைப்படம் தான். அதன் பிறகு அவருக்கு பெரிய வாய்ப்புகள் இல்லை.

அதற்கு முக்கியக் காரணம் அவர் குடிப்பழக்கத்துக்கு அடிமையானதுதான் என சொல்லப்படுகிறது. ஒழுங்காக இருந்த அவருக்கு சிலரின் கெட்ட சவகாசத்தால் குடிப்பழக்கம் அறிமுகமாகியுள்ளது.

ருசி கண்ட பூனையாக கொஞ்சம் கொஞ்சமாக குடிப்பழக்கத்துக்கு அடிமையான அவர் சினிமாவில் கவனம் செலுத்தாமல் குடியே கதியென்று மாறும் அளவுக்கு சென்றுள்ளார்.

இதனால் அவரை தயாரிப்பாளர்கள் தங்கள் படங்களுக்கு கமிட் செய்ய பயந்துள்ளனர். இதனால் பட வாய்ப்புகள் நழுவிப் போக, தான் மறக்கப்பட்டு விட்டோம் என தெரிவதற்கே அவருக்கு சில ஆண்டுகள் ஆகியுள்ளன.

இப்போது விழித்துக் கொண்டு சினிமா வாய்ப்புகளை தேடி வருகிறாராம். கடைசியாக அவருக்கு கார்த்தியின் மெய்யழகன் படத்தில் நடிக்கும் வாய்ப்புக் கிடைத்துள்ளது. இதன் முலம் செகண்ட் இன்னிங்ஸை தொடங்குவாரா எனப் பார்ப்போம்.