முகனுக்கு கவர்ச்சி பாடலால் காதல் வலை வீசிய அபிராமி : பிக்பாஸில் நடந்த கூத்து!!

931

பிக்பாஸில் நடந்த கூத்து

பிக்பாஸில் நேற்று போட்டியாளர்கள் அனைவருக்கும் வித்தியாசமான டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது பிக்பாஸ் தரும் சீட்டில் உள்ள பாடல் வரிகளை ஒரு போட்டியாளர் மற்றொரு போட்டியாளருக்கு டெடிக்கேட் செய்ய வேண்டும். மேலும் பாடியும் காட்ட வேண்டும்.

அந்த வகையில் கவின் திருமலை படத்தில் வரும் நீ என்பது எதுவரை… பாடலை லொஸ்லியா முன்பே சாக்‌ஷிக்கு டெடிக்கேட் செய்து ஷாக்காக்கினார்.

அபிராமியோ பிக்பாஸிற்கு வந்த நாள் முதல் தனது க்ரஷ்ஷாக நினைத்துகொள்ளும் முகேனுக்கு குஷி படத்தில் வரும் கட்டிப்புடி கட்டிப்புடிடா… என்ற கவர்ச்சி பாடலை டெடிக்கேட் செய்து தனது காதல் வலையை மறுபடியும் வீசியுள்ளார். இதை முகேனும் சிரித்தப்படி ஏற்று கொண்டார்.