விஜய் ரசிகர்கள் செய்த செயல்…
பொதுவாகவே ரசிகர்கள் ஓட்டும் போஸ்டர்களால் சிலநேரம் நடிகர்களை வியப்படையச் செய்யும். சில சமயம் நம்மளையே கோமாளி ஆக்கி ஊரே சந்தி சிரிக்கும் வகையில் தலைகுனியச் செய்யும்.
இது எல்லா ஹீரோக்களுக்கும் நடக்கும் அதுவும் ரஜினி விஜய் அஜித் இந்த மூவருக்கும் அடிக்கடி நடக்கும்.
அந்த வகையில் இன்று இருபத்தியோராம் ஆண்டு திருமண நாள் கொண்டாடும் விஜய் மற்றும் சங்கீதா அவர்களை வாழ்த்தி மதுரை ரசிகர்கள் என்ன செய்தார்கள் என்றால்,
புரட்சித்தலைவர் எம்ஜிஆர் ஆக விஜயும் புரட்சித்தலைவி அம்மா ஜெயலலிதாவாக அவரது மனைவி சங்கீதாவையும் சித்தரித்து மதுரை முழுக்க போஸ்டர்களை ஒட்டி தள்ளியுள்ளார்கள் விஜய் ரசிகர்கள்.
இதைப் பார்த்த பல விஜய் ரசிகர்கள், சட்டை காலரை வைத்து முகத்தை மறைத்து அங்குமிங்குமாக ஓடி ஒளிகிறார்கள்.
இதை பார்த்த அஜித் ரசிகர்கள் இந்த வாரம் இது போதும் என்று வெச்சு செய்கிறார்கள்.