பிக்பாஸ் புகழ் ஆரவ்விற்கு திருமணம்- பெண் இந்த நடிகைதானாம், புகைப்படம் இதோ..!

359

ஆரவ்விற்கு திருமணம்…

தமிழ் சினிமாவில் சில வருடங்களுக்கு முன் வந்த ஒரு பெரிய நிகழ்ச்சி பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியின் முதல் சீசனுக்கு வராத பிரச்சனைகளே இல்லை.

மக்களாலும் நிகழ்ச்சி பரபரப்பாக பார்க்கப்பட்டது. ஓவியா-ஆரவ் காதல், பரணி செய்த விஷயம், ஜுலியின் அட்ராசிட்டி என நிகழ்ச்சி முழுவதும் ஒரே பரபரப்பு தான்.

முதல் சீசனை தொடர்ந்து 3 சீசன்கள் ஒளிபரப்பானது, 4வது சீசன் எப்போது என்று தெரியவில்லை.

இந்த நிலையில் முதல் சீசன் வெற்றியாளர் ஆரவ்வின் திருமணம் பற்றி ஒரு தகவல் வந்துள்ளது.

அதாவது ஆரவ்விற்கும், நடிகை ராஹே என்பவருக்கும் செப்டம்பர் 6ம் தேதி சென்னையில் உள்ள பிரபல ஹோட்டலில் திருமணம் நடக்க இருக்கிறதாம்.

ராஹே கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியாக இருக்கும் ஜோஷ்வா படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமாக இருக்கிறார்.